செய்திகள் :

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்: முதல்வர் ஸ்டாலின்

post image

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி இன்று(பிப். 3) நடைபெற்றது. பேரணிக்குப் பின் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்திலும் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதையும் படிக்க: மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கத்துக்கு இடையே அவை நடவடிக்கை!

அண்ணாவின் நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “அண்ணா வழியில் அயராது உழைப்போம்!

தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது:

“எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர்.”

தந்தை பெரியாரின் புகழொளியையும் - அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம்!

நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது!

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று லட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி!

வள்ளியூர் சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி அருகே லாரி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததுநெல்லை மாவட்டம் பழவூரை அடுத்த ஆவரைகுளத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்குச் சொந்தமான மணல் அள்ளும் லாரியை ஓட்ட... மேலும் பார்க்க

விடுதி அறையில் மாணவி தற்கொலை!

கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கோட்டயத்தின் பரம்புழாவைச் சேர்ந்த அனீட்டா பினாய் (வயது 21), இவரது பெற்ற... மேலும் பார்க்க

பிப். 20 முதல் எந்நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

பிப். 20 முதல் எந்நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.சென்னையில் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையில் கீழ் செயல்படும் கூட்டமைப்பு சங்க... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் பலி! குடும்பத்தினர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் பலியானார். குல்கம் மாவட்டத்தின் பெஹிபாக் பகுதியில் இன்று (பிப்.1) மதியம் ஓய்வுப் பெற்ற முன்னாள் ராணு... மேலும் பார்க்க

கார் வெடி குண்டு தாக்குதலில் 14 பெண்கள் உள்பட 15 பேர் பலி!

சிரியாவின் வடக்கு மாகாணத்தில் கார் வெடி குண்டு தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரத்தில் இன்று (பிப்.3) விவசாய தொழி... மேலும் பார்க்க

நிலத் தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது! விடியோ வைரல்!

ஜம்மு காஷ்மீரில் நிலத் தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.ஜம்முவின் டோமானா காவல் நிலையக் கட்டுப்பாட்டிலுள்ள லாலே டா பாக் பகுதியிலுள்ள 21.5 மர்லா அளவிலான நிலம் ... மேலும் பார்க்க