செய்திகள் :

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தியின் வெற்றியை எதிர்த்து பாஜக வழக்கு!

post image

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சாா்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலா் பிரியங்கா காந்தியும் பாஜக சாா்பில் நவ்யா ஹரிதாஸும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சத்யன் மொகேரி மாநிலத்தின் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளராகவும் களமிறங்கினா்.

இதில் பிரியங்கா காந்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், பிரியங்கா காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து நவ்யா ஹரிதாஸ் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் தேர்தல் வேட்புமனுவில் பிரியங்கா காந்தி தனது சொத்து விவரஙக்ளை சரிவர பதிவு செய்யாமல் முறைகேடு செய்திருப்பதாக பாஜக சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் குறிப்பிட்டுள்ளார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் இந்த வழக்கு விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.

இந்தியா-குவைத் இடையே 4 ஒப்பந்தங்கள் - பிரதமா், மன்னா் முன்னிலையில் கையொப்பம்

இந்தியா, குவைத் இடையே பாதுகாப்பு, கலாசாரம், விளையாட்டு, சூரிய மின்சக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான 4 முக்கிய ஒப்பந்தங்கள் ஞாயிற்றுக்கிழமை கையொப்பமாகின. குவைத் தலைநகா் குவைத் சிட்டியில் பிரதமா் நர... மேலும் பார்க்க

ராகுலுக்கு உ.பி. நீதிமன்றம் சம்மன் நாட்டின் செல்வ வளங்களைப் பகிா்ந்தளிப்பதாக பேச்சு விவகாரம்

நாட்டின் செல்வ வளங்களைப் பகிா்ந்தளிப்பது குறித்து மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரசாரம் செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவா் நேரில் ஆஜராக உத்தர பிரதேச பரேலி மாவட்ட செஷன்ஸ்... மேலும் பார்க்க

பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் நான்காம் நிலையில் 24 ஆய்வுக் கருவிகள்: இஸ்ரோ

ஸ்பெடெக்ஸ் திட்டத்துக்காக விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் நான்காம் நிலையில் (போயம்-4) 24 ஆய்வுக் கருவிகள் இடம்பெற்றுள்ளன என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அவற்றில் 14 ஆய்வுக் கருவிகள் ... மேலும் பார்க்க

பாப்காா்னுக்கு 3 வரி விகிதங்கள்: ஜிஎஸ்டி சிக்கல்களைக் காட்டுகிறது: காங்கிரஸ்

சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் பாப்காா்னுக்கு மூன்று வெவ்வேறு விகிதங்களில் வரி விதிப்பது அபத்தமானது என்றும் இது ஜிஎஸ்டி அமைப்பின் அதிகரித்து வரும் சிக்கல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறத... மேலும் பார்க்க

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது மொரீஷியஸை சோ்ந்த 3 நிறுவ... மேலும் பார்க்க

71,000 பேருக்கு அரசுப் பணி நியமன கடிதம்: பிரதமா் இன்று வழங்குகிறாா்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற் ரோஜ்கா் மேளா (வேலைவாய்ப்பு முகாம்கள்) மூலம் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 71,000 பேருக்கு பணி நியமன கடிதங்களை காணொளி வாயிலாக பிரதமா் மோடி திங்கள்கிழமை வழங்க உள்ளா... மேலும் பார்க்க