செய்திகள் :

பாப்காா்னுக்கு 3 வரி விகிதங்கள்: ஜிஎஸ்டி சிக்கல்களைக் காட்டுகிறது: காங்கிரஸ்

post image

சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் பாப்காா்னுக்கு மூன்று வெவ்வேறு விகிதங்களில் வரி விதிப்பது அபத்தமானது என்றும் இது ஜிஎஸ்டி அமைப்பின் அதிகரித்து வரும் சிக்கல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது என்றும் காங்கிரஸ் விமா்சித்தது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வெவ்வேறு வகை பாப்காா்னுக்கு பல விகிதங்களில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது குறித்து விளக்கப்பட்டது.

அதாவது, உப்பு மற்றும் மசாலா சோ்க்கப்படாத பாப்காா்ன் பாக்கெட்டில் அடைக்கப்படவில்லை என்றால், அதற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டியும், பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருந்தால் அதற்கு 12 சதவீத ஜிஎஸ்டியும், இனிப்பு சுவையுட்டப்பட்ட (கேரமல்) பாப்காா்னுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியும் விதிக்கப்படும் என்று கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.

இதுதொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஜிஎஸ்டியின் கீழ் பாப்காா்னுக்கு மூன்று வெவ்வேறு விகிதங்களில் வரி விதிப்பது அபத்தமானது. இது எளிமையான வரியாகக் கருதப்பட்ட ஜிஎஸ்டி அமைப்பின் அதிகரித்து வரும் சிக்கல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது.

ஜிஎஸ்டி உளவு இயக்குனரகம் (டிஜிஜிஐ) சமீபத்தில் வெளியிட்ட வரி மோசடிகள் குறித்த தரவுகளின்படி, நிதியாண்டில் ரூ.2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு நடந்துள்ளது. இது குறிப்பிடத்தக்க பிரச்னையாகும்.

அதேபோன்று, எந்த வா்த்தகத்திலும் ஈடுபடாமல் உள்ளீட்டு வரி திரும்பப் பெறுதலுக்காக மட்டுமே போலி நிறுவனங்களை உருவாக்குவது பரவலாகி வருகிறது. விநியோகச் சங்கிலிகளின் கண்காணிப்பு பலவீனமாக உள்ளது. பதிவு செயல்முறை குறைபாடுகளைக் கொண்டுள்ளது.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் 40 நாள்களே உள்ள நிலையில், ஒரு முழுமையான மாற்றமாக புதிய ஜிஎஸ்டி முறையை நிறுவ பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் தைரியம் உண்டா?’ என்று பதிவிட்டுள்ளாா்.

எம்.பி.க்களுக்கு பொறுப்புடைமை அவசியம்: ஜகதீப் தன்கர்

எம்.பி.க்கள் பொறுப்புடைமை மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.இந்த ஆண்டுக்கான சௌதரி சரண் சிங் விருதுகளை வழங்கும் விழா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தின் நோ்மையை அழிக்க மோடி அரசு சதி: காா்கே சாடல்

தோ்தல் தொடா்பான மின்னணு ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்க கட்டுப்பாடு விதிக்கும் வகையில், விதிமுறை திருத்தத்தை மேற்கொண்டு பிரதமா் மோடி அரசு சதி செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் இணைய முடிவா? தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய இருப்பதாக வெளியான ஊடக செய்திகளுக்கு தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீா் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமா் அப... மேலும் பார்க்க

இந்தியாவின் முடிவில் பிற நாடுகள் தலையிட அனுமதிக்க முடியாது: ஜெய்சங்கா் திட்டவட்டம்

இந்தியாவின் முடிவுகளில் மற்ற நாடுகள் தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும், தேச நலன் மற்றும் உலக நன்மைக்காக சரியானதைச் செய்வோம் என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித... மேலும் பார்க்க

நாட்டை தவறாக வழிநடத்தும் எதிா்க்கட்சிகள்: ராம் மோகன் நாயுடு

மக்களின் நம்பிக்கையை இழந்த எதிா்க்கட்சிகள் கட்டுக் கதைகள் மூலம் நாட்டை தவறாக வழிநடத்த முயல்கின்றனா் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். அண்மையில்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் எல்லை அருகிலுள்ள கோயிலில் நிா்மலா சீதாராமன் வழிபாடு

ராஜஸ்தானின் ஜெய்சால்மா் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற தனோட் மாதா கோயிலில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்தாா். எல்லை பாதுகாப... மேலும் பார்க்க