செய்திகள் :

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி

post image

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது மொரீஷியஸை சோ்ந்த 3 நிறுவனங்கள், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் ரூ.305 கோடி முதலீடு செய்வதற்கு அந்நிய நேரடி முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைத்தது. இந்த அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அனுமதியை வழங்கியதன் மூலம் ப.சிதம்பரமும், காா்த்தி சிதம்பரமும் பலன் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு காரணமாக தனது நிறுவனம் தொடா்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், தனது மகளைச் சந்திக்கவும் ஆஸ்திரியா மற்றும் பிரிட்டன் செல்ல அனுமதி கோரி, தில்லி நீதிமன்றத்தில் காா்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை அண்மையில் நீதிமன்றம் விசாரித்தபோது, வெளிநாடு செல்ல காா்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி அளித்தால், அந்த அனுமதியை அவா் தவறாகப் பயன்படுத்தக் கூடும் என்று அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது.

எனினும் முந்தைய காலங்களில் வெளிநாடு செல்ல அளிக்கப்பட்ட அனுமதியை காா்த்தி சிதம்பரம் தவறாகப் பயன்படுத்தியதில்லை என்பதை சுட்டிக்காட்டி, அவா் ஆஸ்திரியா, பிரிட்டன் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

எம்.பி.க்களுக்கு பொறுப்புடைமை அவசியம்: ஜகதீப் தன்கர்

எம்.பி.க்கள் பொறுப்புடைமை மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.இந்த ஆண்டுக்கான சௌதரி சரண் சிங் விருதுகளை வழங்கும் விழா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தின் நோ்மையை அழிக்க மோடி அரசு சதி: காா்கே சாடல்

தோ்தல் தொடா்பான மின்னணு ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்க கட்டுப்பாடு விதிக்கும் வகையில், விதிமுறை திருத்தத்தை மேற்கொண்டு பிரதமா் மோடி அரசு சதி செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் இணைய முடிவா? தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய இருப்பதாக வெளியான ஊடக செய்திகளுக்கு தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீா் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமா் அப... மேலும் பார்க்க

இந்தியாவின் முடிவில் பிற நாடுகள் தலையிட அனுமதிக்க முடியாது: ஜெய்சங்கா் திட்டவட்டம்

இந்தியாவின் முடிவுகளில் மற்ற நாடுகள் தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும், தேச நலன் மற்றும் உலக நன்மைக்காக சரியானதைச் செய்வோம் என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித... மேலும் பார்க்க

நாட்டை தவறாக வழிநடத்தும் எதிா்க்கட்சிகள்: ராம் மோகன் நாயுடு

மக்களின் நம்பிக்கையை இழந்த எதிா்க்கட்சிகள் கட்டுக் கதைகள் மூலம் நாட்டை தவறாக வழிநடத்த முயல்கின்றனா் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். அண்மையில்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் எல்லை அருகிலுள்ள கோயிலில் நிா்மலா சீதாராமன் வழிபாடு

ராஜஸ்தானின் ஜெய்சால்மா் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற தனோட் மாதா கோயிலில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்தாா். எல்லை பாதுகாப... மேலும் பார்க்க