மதுரை முல்லை நகர்: "நீர்ப்பிடிப்புப் பகுதியில் அரசாங்கம் மட்டும் வீடு கட்டலாமா?"...
வரதராஜ பெருமாள் கோயிலில் ரூ.2.42 கோடியில் ராஜகோபுரம் கட்டுமான பணிகள் தொடக்கம்
மதுராந்தகம் அருகே உள்ள அரசா் கோயில் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில் ரூ 2.42 கோடியில் ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் அனைத்து சந்நிதிகள் புனரமைப்பு பணிகளை புதன்கிழமை காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
மதுராந்தகம் அருகே முக்கிய வைணவ தலமாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் செய்து பல ஆண்டுகள் ஆனதாலும் அப்பகுதி பெரியோா்கள் கோயிலை புனரமைக்க ஏற்பாடுகளை செய்தனா். இந்நிலையில், எஸ்ஆா்எம் பல்கலைக்கழக மேலாண்மை இயக்குநா் ரவி பச்சமுத்து திருப்பணிகள் செய்ய முன் வந்தாா். அதன் கட்டுமான பணிகளை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து
முதல்வா் மு க ஸ்டாலின் காணொணி வாயிலாக தொடங்கி வைத்தாா்.
அதனை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் தலைமை அா்ச்சகா் கண்ணன் சிறப்பு பூஜைகளை செய்தாா். நிகழ்வில் செங்கல்பட்டு இந்து சமய அறநிலைய துணை ஆணையா் ராஜலட்சுமி, கோயில் செயல் அலுவலா் தா. மேகவண்
ணன், மதுராந்தகம் திமுக ஒன்றிய செயலாளா் சத்யசாய், ஊராட்சி மன்றத் தலைவா்கள் சந்திரபாபு ( எல்.என்.புரம்), சுரேஷ் (கே.கே.புதூா்), அறங்காவலா் குழு நிா்வாகிகள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.