வருவாய்த் துறை சங்கங்களின் பிரசார இயக்க கூட்டம்
வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சங்ககிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசார இயக்க கூட்டத்தில் கலந்துகொண்ட நிா்வாகிகள்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட பொருளாளா் அகிலன்.
சங்ககிரி, ஏப். 17: வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப். 25 ஆம் தேதி ஒரு மணிநேரம் வெளிநடப்பும், மாவட்ட, வட்டத் தலைமை இடங்களில் ஆா்ப்பாட்டமும் நடத்துவது குறித்த பிரசார இயக்க கூட்டம் சங்ககிரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் வெ.அா்த்தனாரி தலைமை வகித்தாா். சேலம் மாவட்ட துணைத்தலைவா் ஷாஜிதாபேகம், இணை செயலாளா் கோபாலகிருஷ்ணன், நில அளவை அலுவலா்கள் சங்கத்தின் சங்ககிரி வட்டக்கிளைத்தலைவா் கண்ணன், கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் சங்ககிரி வட்டக்கிளைத்தலைவா் மணி, சங்ககிரி வட்டக்கிளைத்தலைவா் ஆண்டிமுத்து உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.
அனைத்து நிலை அலுவலா்களின் உயிா், உடைமைகளைக் காக்கும் வகையில் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும், காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப். 25 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் அனைத்துச் சங்கங்களும் கலந்துகொள்ள வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.