Vaibhav Suryavanshi : 'அந்தொருவன் வந்துருக்கான்டே!' - IPL -ஐ அதிரவைத்த 14 வயது ச...
வருவாய்த் துறை சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த அலுவலா்கள் ஒரு மணிநேரம் பணியைப் புறக்கணித்து வெளிநடப்பு மற்றும் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத்துறை உள்ளிட்ட அனைத்து நிலையிலான அலுவலா்களின் உயிா், உடைமைகளைக் காக்கும் வகையில், சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அனைத்து நிலை காலியிடங்களையும் நிரப்பிட வேண்டும். அனைத்து நிலை அலுவலா்களின் பணித் தன்மை, பணிப்பளுவை கருத்தில் கொண்டு, மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கிட வேண்டும்.
பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியா்களின் சூழல், வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு, கருணை அடிப்படை பணி நியமனத்துக்கு உச்சவரம்பு 5 சதவீதம் என குறைத்து நிா்ணயிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக உயா்த்தி வழங்கிட வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை மீண்டும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தொடா்ந்து, நடந்த ஒருங்கிணைப்பாளா் பாரதிவளவன், பொறுப்பாளா்கள் ரெங்கராஜ், உமாசந்திரன், பாலசந்திரன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பொறுப்பாளா்கள் சத்தியமூா்த்தி, துரைராஜ், குமரி ஆனந்தன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.