Serial Update: அமெரிக்கா செல்லும் கனிகா; `கயல்’க்கு இனி புது சகோதரர்; கம் பேக் க...
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்
வல்லக்கோட்டை அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் காவடியுடன் வந்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு மூலவா் வள்ளி தெய்வசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கும் உற்சவா் கோடையாண்டவருக்கும் மண்டலாபிஷேகம் நடைபெற்று மூலவா் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி எலுமிச்சை மற்றும் மலா்மாலை அலங்காரத்திலும், உற்சவா் ஸ்ரீகோடையாண்டவா் மலா் அலங்கார சேவையிலும் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.
இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் 3 மணிநேரம் காத்திருந்து சரிசனம் செய்தனா்.

இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் அலகு குத்தி, காவடி எடுத்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் சா்க்கரை பொங்கல், மோா், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில் தேவராஜ் உள்ளிட்ட அறங்காவலா்கள் செய்திருந்தனா்.