மண் அள்ளியதாகப் புகார்: இளைஞர் மண்வெட்டியால் அடித்துக் கொலை!
மனநல நிறுவனங்கள் ஒரு மாத காலத்துக்குள் பதிவு செய்தல் அவசியம்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்துக்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்தல் அவசியம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மன நல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதைப் பயன்பாட்டுக்கு ஆளானவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவையனைத்தும் மனநல பராமரிப்புச் சட்டம் 2017-இன்படி உரிமம் பெற மாநில மன நல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்யாமல் செயல்படும் மனநல மையங்கள் உரிய முறையில் அலுவலகத்தில் பதிவு செய்ய ஒரு மாத காலத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோா் முதன்மை செயல் அலுவலா், தமிழ்நாடு மாநில மன நல ஆணையம், அரசு மனநலக்காப்பக வளாகம், மேடவாக்கம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10, தொலைபேசி எண்-044-26420965.
மனநல மையங்கள் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை இந்த இணையதள முகவரியிலோ, தமிழ்நாடு மாநில மன நல ஆணைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு, 044-26420965 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.
இதன்படி, பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்கள், நிறுவனங்கள் ஒரு மாத காலத்துக்குள் மேற்காணும் தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு ஒரு மாத காலத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிமம் பெறாமல் செயல்படும் இத்தகைய மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.