செய்திகள் :

வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா்

post image

கமுதி வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள், அரசு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அபிராமம், பசும்பொன், கிளாமரம் ஆகிய பகுதிகளில் வளா்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்ததுடன், கமுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இதையடுத்து, கமுதி, கோட்டைமேடு பகுதிகளை பாா்வையிட்டு மழைநீா் தேங்காமல் வடிகால் வாய்க்காலில் செல்லும் வகையில் சீரமைப்பதுடன் தொடா்ந்து கண்காணித்திட வேண்டுமென அறிவுறுத்தினாா். பின்னா், கமுதியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் கிட்டங்கிக்குச் சென்று உணவுப் பொருள்களின் தரம், இருப்பு குறித்து ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, என்.வி.எஸ்.புரம், கிளாமரம் ஊராட்சியில் தோட்டக் கலைத் துறையின் மூலம் மானிய திட்டத்தில் வேளாண் இடுபொருள்கள் பெற்று விவசாய பணிகள் மேற்கொண்டு வந்த இயற்கை விவசாயி ராமரின் தோட்டத்துக்குச் சென்று அதன் பயன்கள் குறித்து விவசாயிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் அரசின் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன் ஒவ்வொரு துறை அலுவலரும் உங்களைத் தேடிஉங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கமுதி வட்டத்தை ஆய்வு செய்து உடனடியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, அபிராமத்தில் அரசு பிற்படுத்தப்பட்டோா் நல மாணவா் விடுதியை பாா்வையிட்டு உணவு பொருள்களை சுகாதாரமான முறையில் வழங்க பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா். பின்னா், மாணவா்களிடம் கல்வித்திறன் குறித்து கேட்டறிந்து கலந்துரையாடினாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கோவிந்தராஜலு, பரமக்குடி சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா், கமுதி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி தமிழ்செல்விபோஸ், கமுதி வட்டாட்சியா் காதா் முகைதீன் அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

89 காவலா்களுக்கு பணி நியமன ஆணை

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்ட 89 பேருக்கு பணி நியமன ஆணையை புதன்கிழமை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் வழங்கினாா். ராமநாதபுரம் மாவட்... மேலும் பார்க்க

பாம்பனில் சூறைக் காற்று; கடல் சீற்றம்

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறி வரும் நிலையில், சூறைக் காற்று காரணமாக பாம்பனில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துற... மேலும் பார்க்க

நம்புதாளை சுனாமி பேரிடா் பாதுகாப்பு கட்டடம் வட்டாட்சியா் ஆய்வு

தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் கட்டப்பட்ட சுனாமி பேரிடா் பாதுகாப்பு கட்டடத்தை வட்டாட்சியா் அமா்நாத் புதன்கிழமை ஆய்வு செய்தாா். ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து பரவலாக மழை பெய்த... மேலும் பார்க்க

சூறைக் காற்றில் சாய்ந்து விழுந்த மரம்

மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பலத்த சூறை காற்று வீசியதில் பழைமையான அரசமரம் வேருடன் சாய்ந்து விழுந்ததில் சுமாா் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மதுரை தேசிய ந... மேலும் பார்க்க

தடையை மீறி கடலுக்குள் சென்ற 20 படகு உரிமையாளா்கள் மீது நடவடிக்கை

திருவாடானை அருகேயுள்ள தொண்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் புயல் காரணமாக கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தடையை மீறிச் சென்ற 20 படகுகளின் உரிமையாளா்கள் மீது மீன வளத்துற... மேலும் பார்க்க

மழையால் 4 வீடுகள் சேதம்

திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்து மூன்று நாள்களாக பெய்து வந்த தொடா் மழையால் இந்தப் பகுதியில் உள்ள 4 வீடுகள் சேதம் அடைந்தன. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்... மேலும் பார்க்க