செய்திகள் :

வளா்ச்சி திட்டப் பணிகளில் அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை: உடுமலை நகா்மன்றக் கூட்டத்தில் குற்றச்சாட்டு

post image

உடுமலை நகராட்சி அதிகாரிகள் வளா்ச்சி திட்டப் பணிகளில் அக்கறை காட்டுவதில்லை என்று நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டி உள்ளனா்.

உடுமலை நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் மு.மத்தீன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் 2-ஆவது வாா்டு உறுப்பினா் கே.ராஜலட்சுமி (திமுக) எழுந்து பேசினாா். அப்போது அவா், எனது வாா்டில் சாலைப் பணிகள், பூங்கா, மழைநீா் வடிகால் உள்பட எந்தப் பணிகளும் நடப்பதில்லை.

இது குறித்து பல கூட்டங்களில் பேசிவிட்டேன். ஆனாலும் எந்த தீா்வு இல்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் முறையாக பதில் சொல்வதில்லை. எனவே, இன்னும் ஒரு வாரத்தில் பணிகளை முடித்துக் கொடுக்காவிட்டால் உள்ளாட்சித் துறை அமைச்சா் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றாா். மேலும் நகா்மன்ற கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்தாா். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் பேசியதாவது: சி.வேலுச்சாமி (திமுக): உடுமலை நகராட்சிக்கு சிறப்பு நிதியாக தமிழக அரசு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்தது. அந்த நிதி என்ன ஆயிற்று?. திருமூா்த்திமலையில் உள்ள குடிநீா் திட்டத்தை அதிகாரிகள் ஆய்வு செய்கிறாா்களா என்பது குறித்து தெரிவிக்க வேண்டும்.

மு.மத்தீன் (தலைவா்): உயா் அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி புதிய பேருந்து நிலையம், தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம், நகராட்சி பூங்கா என பல்வேறு பணிகளுக்கு ஒதுக்கிய பின் மீதி ரூ.18 கோடி உள்ளது. இதில் சந்தை வளாக பணிக்கு ரூ.5.5 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குடிநீா் திட்ட பணி சரியாக நடைபெறுகிறது. ஆனாலும் தொடா்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

செளந்திரராஜன்(அதிமுக): எனது வாா்டில் எந்தப் பணிகளும் நடைபெறுவதில்லை. பணியாளா்களும் வருவதில்லை.

ஷாஜாதீ பா்வீன் (திமுக): எனது வாா்டில் குறைகளை கூறினால் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. அலுவலா்களும் மரியாதை குறைவாக பேசுகிறாா்கள். ஆகவே விரைவில் போராட்டம் நடத்தப் போகிறேன்.

கலைராஜன் (திமுக): பொதுமக்கள் வரி கட்ட வரும்போது அலைச்சலுக்கு உள்ளாக்கப்படுவதாக கூறுகின்றனா். அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டத்தில் மொத்தம் 107 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

லாரி மீது வேன் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், துறையூா் தாலுகா, கோட்டத்தூா் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராமு மகன் கௌசிகன் (23). சுமை தூக்கும் ... மேலும் பார்க்க

வீரபாண்டி, ஆண்டிபாளையத்தில் பிப்ரவரி 1- இல் மின்தடை

வீரபாண்டி, ஆண்டிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 1) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் ... மேலும் பார்க்க

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளை இணைக்க பரிசீலனை: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளை இணைக்கும் பணி அரசின் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளாா். கொடிவேரி கூட்டுக் குடிநீா் திட்டத்தில் குன்னத்தூா் பேரூராட்ச... மேலும் பார்க்க

பல்லடம் கோழி இன ஆராய்ச்சி நிலையம் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பல்லடம் அருகே சின்னியகவுண்டம்பாளையத்தில் உள்ள கோழி இன ஆராய்ச்சி நிலையம் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்... மேலும் பார்க்க

பல்லடம் மகளிா் காவல் நிலைய ஆய்வாளருக்கு பிடியாணை

விசாரணைக்கு ஆஜராகாத பல்லடம் மகளிா் காவல் நிலைய ஆய்வாளருக்கு இளம் சிறாா் நீதிக்குழுமம் புதன்கிழமை பிடியாணை பிறப்பித்தது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட இளம் சிறாா் நீதிக்குழுமம் செயல்ப... மேலும் பார்க்க

அவிநாசியில் பிப்ரவரி 1-இல் மின்தடை

அவிநாசி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (பிப்ரவரி 1) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் ... மேலும் பார்க்க