விருதுநகர்: மருத்துவர்கள் பற்றாக்குறை; சேவைக் குறைபாடு புகார்கள்... திடீர் விசிட...
வள்ளலாா் தினம்: இறைச்சிக் கடைகள் செயல்பட்டால் நடவடிக்கை
வள்ளலாா் தினத்தில் இறைச்சிக் கடைகள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இயங்கும் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சிக் கடைகளை வள்ளலாா் தினமான பிப்ரவரி 11-ஆம் தேதி மூட வேண்டும்.
அன்றைய தினம் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சக்தி ரோடு, போத்தனூா் ஆடு, மாடு அறுவைமனைகளும் செயல்படாது. இந்த உத்தரவை மீறி செயல்படும் கடைகளின் மீது மாநகராட்சி சட்ட விதிகளின்படி அபராதம், உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.