முதல்வர் பிறந்தநாள்: தமிழில் கையெழுத்திட்டு ஆளுநர் வாழ்த்துக் கடிதம்!
வள்ளியூா் வட்டார புகைப்படக் கலைஞா்கள் சங்கம் தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் வட்டார புகைப்பட கலைஞா்கள் சங்கம் தொடக்கவிழா நடைபெற்றது.
விழாவுக்கு, திமுக கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அலெக்ஸ் அப்பாவு தலைமை வகித்து சங்கத்தை தொடங்கி வைத்து உறுப்பினா் அட்டைகளை வழங்கிப் பேசினாா்.
இந்நிகழ்ச்சியில், டி.டி.என். கல்விக் குழுமத்தின் தலைவா் தா. லாரன்ஸ், கிழக்கு மாவட்ட துணைச் செயலா் வெ. நம்பி ஆகியோா் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினா்.
சங்கத்தின் தலைவராக ஏஞ்சல் ராஜா, செயலராக லெட்சுமணன், பொருளாளராக மணி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.