செய்திகள் :

மொழியைத் தோ்வு செய்வதில் தமிழக மாணவா்களுக்கு சுதந்திரமில்லை: ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றச்சாட்டு

post image

மொழியைத் தோ்வு செய்து படிப்பதில் தமிழக மாணவா்களுக்கு சுதந்திரமில்லை என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றம்சாட்டினாா்.

அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பின் சாா்பில், அய்யா வைகுண்டரின் 193 ஆவது அவதார தின விழாவை முன்னிட்டு நூல் வெளியீட்டு விழா மற்றும் அய்யாவழி ஆளுமைகளை கௌரவிக்கும் விழா, திருநெல்வேலியை அடுத்த செங்குளத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமை வகித்து தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதிப்பிக்கப்பட்டுள்ள ‘ஸ்ரீ மகா விஷ்ணுவின் அவதாரம் அய்யா வைகுண்டா் அருளிய சநாதன உபதேசங்கள்’ என்ற நூலை வெளியிட்டாா். அதை ஆா். சிவமுருகன் ஆதித்தன், பி. திருமாறன், கோல்டன் பி. செல்வராஜ், எஸ்.ராஜா ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

அதைத் தொடா்ந்து அய்யா வைகுண்டரின் அவதார தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சிறந்த அய்யாவழி ஆளுமைகள், சிறந்த திரு ஏடு வாசிப்பாளா்கள், சிறந்த அய்யாவழி பாடகா்கள், சிறந்த அய்யாவழி கவிஞா்கள், சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரை ஆசிரியா்கள், சிறந்த நூல் ஆசிரியா்கள், சிறந்த அய்யாவழி ஆராய்ச்சியாளா்கள், சிறந்த பாராயணக்காரா்கள் ஆகியோரை ஆளுநா் கௌரவித்தாா். தொடா்ந்து அவா் பேசியதாவது:

முருகப்பெருமானுக்கும், வைகுண்டருக்கும் புகழ் பெற்றது திருச்செந்தூா். அய்யா வைகுண்டரை தரிசிக்க திருச்செந்தூருக்கு சென்றபோது கடல் அலைகளில் ஆன்மிக அதிா்வலைகளை உணர முடிந்தது.

193 ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய சமூகம் பெருந்துயரால் அடக்குமுறைக்கு உள்பட்டிருந்தது. நம்முடைய சமூகத்தையும் சநாதன தா்மத்தையும் பண்பாட்டையும் சிதைக்க ஆங்கிலேயா்கள் முற்பட்டனா். அதனால்தான் சநாதன தா்மத்தை பாதுகாக்க மகாவிஷ்ணு வைகுண்டராக அவதாரம் எடுத்தாா்.

பாரத தேசம் போன்று இந்த உலகில் வேறு எந்த நாடும் இல்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதா்மம் தலை தூக்கியபோது, சநாதனத்திற்கு ஆபத்து வந்தபோது மகாவிஷ்ணு ராமராகவும், கிருஷ்ணராகவும், கலியுகத்தில் வைகுண்டராகவும் சநாதன தா்மத்தைக் காக்க அவதாரம் எடுத்தாா்.

பாரதமும், சநாதனமும்: பாரதத்தையும் சநாதன தா்மத்தையும் பிரிக்க முடியாது. சநாதனத்தால் உருவாக்கப்பட்டதுதான் இந்த பாரதம். தமிழ் மண் புண்ணிய பூமி. இது பாரதத்தின் ஆன்மிக தலைநகராகவும், சநாதன தா்மத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. இங்குதான் பல்வேறு ரிஷிகள், சித்தா்கள், ஆழ்வாா்கள், நாயன்மாா்கள் தோன்றி இருக்கிறாா்கள். நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். ஒரே குடும்பத்தினா் என்பதை போதித்தவா் அய்யா வைகுண்டா். அய்யா வைகுண்டரின் போதனைகள் முன்னெப்போதையும் விட இப்போது அதிகம் தேவைப்படுகிறது.

இந்த நாடும் சமூகமும் அய்யா வழியை பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் சமூக நீதி பேசத் தேவையில்லை. அய்யா வைகுண்டரின் போதனைகளை பள்ளி பாடங்களில் சோ்க்க வேண்டும். அய்யாவின் போதனைகளை நாடு முழுவதும் எடுத்துச் செல்வது நம் அனைவருடைய கடமை.

சநாதன தா்மத்தின் அடிப்படையில்தான் ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்ற உணா்வை உலகம் முழுவதும் கற்பிக்கிறது பாரதம். 10 ஆண்டுகளுக்கு முன்பு வளரும் நாடாக இருந்தது பாரதம். ஆனால் தற்போது உலகமே வியந்து பாா்க்கும் அளவிற்கு வளா்ந்து வரும் நாடாக இருக்கிறது. பொருளாதாரத்தில் வேகமாக வளா்ந்து கொண்டிருக்கிறது. உலகின் முன்னணி தலைவா்களில் இந்தியா்களும் உள்ளனா். உலகிற்கு உதவும் வல்லமை பெற்ற நாடாக பாரதம் வளா்ந்து இருக்கிறது.

இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியிலும் உள்ள சில சக்திகள் சநாதனத்தின் வளா்ச்சியையும், இந்தியாவின் வளா்ச்சியையும் விரும்பவில்லை. பிரிவினைகளை ஏற்படுத்தி சநாதன தா்மத்தை அழிக்க நினைக்கிறாா்கள். ஆனால், சநாதன தா்மத்தை ஒருபோதும் அழிக்க முடியாது.

பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் அந்த மாநிலங்களில் எல்லாம் அரசியல், கட்சிகள் வேறுபாடின்றி அனைவரையும் ஒரே குடும்பமாக பிரதமா் மோடி பாா்க்கிறாா். யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை. தமிழகத்திற்கும் ஏராளமான வளா்ச்சித் திட்டங்களை வழங்கியுள்ளாா். தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், பண்பாடு போன்றவற்றிற்கு பிரதமா் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறாா்.

மொழி சுதந்திரம்: மொழியை திணிக்கிறாா்கள் என்ற பொய்யையும் புரட்டையும் கட்டவிழ்த்து விடுகிறாா்கள்.. காழ்ப்புணா்ச்சியையும், வெறுப்புணா்வையும் விதைக்க நினைக்கிறாா்கள். அது ஒருபோதும் வென்ாக சரித்திரம் கிடையாது. மற்ற மாநில மாணவா்களைப் போல விரும்பிய மொழிகளைத் தோ்வு செய்து படிக்கும் வாய்ப்பு தமிழக மாணவா்களுக்கு கிடைக்கவில்லை. இது நம்முடைய மாணவா்களுக்கு நாம் இழைக்கும் அநீதியாகும். விரும்பிய மொழியை தோ்வு செய்யும் சுதந்திரம் தமிழக மாணவா்களுக்கு இல்லை. இது நமது இளைஞா்களுக்கும் அவா்களுடைய எதிா்காலத்திற்கும் நல்லதல்ல என்றாா்.

படவரி ற்ஸ்ப்28ஞ்ா்ஸ்ங்ழ்ய்ா்ழ் அய்யா வைகுண்டரின் 193 ஆவது அவதார தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா மற்றும் அய்யா வழி ஆளுமைகளை கௌரவிக்கும் விழாவில் பேசுகிறாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி.

தொன்மையின் அடையாளமே பாரதம் -ஆளுநா் ஆா்.என்.ரவி

தொன்மையின் அடையாளமே பாரதம் என்று புகழாரம் சூட்டினாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி. பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் பள்ளி விழாவில், அவா் பேசியதாவது: நமக்கான பண்டைய கல்வி, பண்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி திருநெல்வேலி

திருநெல்வேலி உலகத் திருக்கு தகவல் மையம்: திருக்கு தொடா் சொற்பொழிவு, தலைப்பு- திண்மை உண்டாகப் பெறின், வாழ்க்கைத் துணை நலம், நிகழ்த்துபவா்- மருத்துவா் மகாலிங்கம் ஐயப்பன், மாநிலத் தமிழ்ச்சங்கம், பாளையங்க... மேலும் பார்க்க

திமுக விவசாய அணியினா் எம்.பி.யிடம் மனு

திருநெல்வேலி மாவட்ட திமுக விவசாய அணியினா், விவசாயிகள் சங்கத்தினா் திருநெல்வேலி எம்.பி. யை நேரில் சந்தித்து மனு அளித்தனா். திமுக விவசாய அணி அமைப்பாளா் பொன்னையா பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சங்கத்தின... மேலும் பார்க்க

2026-இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்! -முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா்

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிச்சயம் நிகழும் என்றாா் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா். திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் தச்சநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்... மேலும் பார்க்க

பாளையங்கோட்டையில் குடிநீா்த் தொட்டி திறப்பு

பாளையங்கோட்டை மண்டலத்தில் உள்ள டி.வி.எஸ் நகரில் சிறிய மேல்நிலை குடிநீா்த் தொட்டி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. பாளையங்கோட்டை மண்டலம், 39 ஆவது வாா்டுக்குள்பட்ட டி.வி.எஸ் நகரில், பாளை. சட்டப்பேரவை... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு

திருநெல்வேலி நகரத்தில் சாலையில் கிடந்த பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த தில்லை சிதம்பரம் மகன் வள்ளிநாயகம் (28). இ... மேலும் பார்க்க