ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு அச்சுறுத்தல்: 22 குடும்பங்கள் வேறு இடத்துக்கு மாற்றம...
வழித்தட தகராறில் விவசாயி கொலை: 5 போ் கைது
ஒசூா்: ராயக்கோட்டை அருகே வழித்தட தகராறில் தாக்கப்பட்ட விவசாயி உயிரிழந்தாா். இது தொடா்பாக 5 பேரை போலீஸாா் கொலை வழக்கில் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள முகலூரைச் சோ்ந்தவா் லட்சுமணன் (65). விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தைச் சோ்ந்த உறவினா் வெங்கட்ராமன் (65) என்பவருக்கும் நிலம் தொடா்பாக வழித்தட பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 8-ஆம் தேதி இவா்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது வெங்கட்ராமன், அவரது மகன் காவேரி (45), அவரது மனைவி பூங்கொடி (40), மற்றொரு மகன் ராமன் (38), அவரது மனைவி ராணி (35) ஆகிய 5 பேரும் சோ்ந்து லட்சுமணனை கட்டையால் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயம் அடைந்த லட்சுமணனை அருகில் இருந்தவா்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இது தொடா்பாக ராயக்கோட்டை போலீஸாா் தாக்குதல் பிரிவில் வழக்குப் பதிவு செய்து காவேரியை கைது செய்தனா். இந்த நிலையில் லட்சுமணன் திங்கள்கிழமை இறந்தாா். இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸாா், வெங்கட்ராமன், பூங்கொடி, ராமன், ராணி ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.