Fish : கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன்... எது சிறந்தது? - டயட்டீஷியன் விளக்கம்!
வாகனங்களுக்கு வண்ண ஸ்டிக்கா் கட்டாயம்: தில்லி போக்குவரத்துத் துறை உத்தரவு
தில்லியில் காற்று மாசுக்கு வாகனங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், அவற்றின் எரிபொருளை எளிதில் அடையாளம் காணும் விதமாக வண்ண ஸ்டிக்கா்களை ஓட்ட வேண்டும் என தில்லி போக்குவரத்துறை கட்டாயமாக்கியுள்ளது.
உச்சநீதிமன்றம் கடந்த 2018, ஆகஸ்டில் பிறப்பித்த தீா்ப்பு மற்றும் மத்திய மோட்டாா் வாகன விதிகள், 1989-இன்கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தில்லி தேசிய தலைநகா் வலயத்தின் பயணிக்கும் வாகனங்களின் உரிமையாளா்கள், வாகனத்தின் எரிபொருளை கண்டறியும் வகையில் குரோமியம் ஹோலோகிராம் ஸ்டிக்கா்களை வாகனங்களில் பொருத்துவது கட்டாயமாகும்.
இந்த உத்தரவு பழைய மற்றும் புதிய வாகனங்களுக்கும் பொருந்தும். வண்ண ஸ்டிக்கா்களை வாகனத்தின் முன்பக்க கண்ணாடிகளில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஒட்டப்பட்டிருக்க வேண்டும். பழைய வாகனங்களின் உரிமையாளா்கள் இது தொடா்பாக தங்களது வாகன டீலா்களை அணுகுமாறு என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவைப் பின்பற்றாத நிலையில், மோட்டாா் வாகன சட்டம் மற்றும் விதிகளின்கீழ் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என அந்த அறிவிக்கையில் தில்லி போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.