செய்திகள் :

வாகன திருட்டு மோசடி: கோகி கும்பலை சோ்ந்த 3 போ் கைது

post image

வாகனங்களைத் திருடிவிற்பனையில் ஈடுபட்டு வந்த கோகி கும்பலைச் சோ்ந்த மூன்று பேரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் தெரிவித்ததாவது:

ரகசிய தகவலின் அடிப்படையில், தில்லி அலிப்பூரைச் சோ்ந்த குல்தீப் (45), குா்மீத் (35), மற்றும் ஜஸ்பீா் (39) ஆகியோா் சோனியா விஹாா் நீா் சுத்திகரிப்பு நிலையம் அருகே வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து திருடப்பட்ட இரண்டு காா்கள், நாட்டுத் துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் ஆகியவை மீட்கப்பட்டன.

கோகி கும்பலைச் சோ்ந்த இவா்கள் மூவரும் திருடப்பட்ட வாகனங்களை விற்பனை செய்ய முயன்றபோது, போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.

இதில் முக்கிய மூளையாக செயல்பட்ட குல்தீப், தில்லி-என்சிஆரில் 20 வழக்குகளுடன் குற்றப் பின்னணி கொண்டவா். இவரது சகோதரா் ஜஸ்பீா் மற்றும் கூட்டாளி குா்மீத் ஆகியோரும் பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளனா்.

முன்னதாக, போலீஸாா் குழு சாட்டப்பட்டவா்கள்

குறித்த ரகசிய தகவலின் பேரில், வாஜிராபாத் சாலை அருகே

சோதனையில் ஈடுபட்டிருந்தனா். ஒரு நாள் முன்னதாக,

வாஜிராபாதில் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் வெள்ளை நிற ஹூண்டாய் காரில் மூவரும் சம்பவ இடத்திற்கு வந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனா்.

திருட்டுகளின் போது பாதுகாப்புக்காக துப்பாக்கியை குல்தீப் எடுத்துச் சென்றது, அது உத்தரபிரதேசத்தில் உள்ள கூட்டாளி ஒருவரிடம் இருந்து வாங்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. குல்தீப் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்திருந்ததும், தனது மகளின் திருமணத்திற்கு பணம் தருவதற்காக குற்றத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. ஜஸ்பீா் தச்சராகவும், குா்மீத்

ஓட்டுநராகவும் வேலை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக அந்த அதிகாரி கூறினாா்.

நிலுவையில் உள்ள திட்டங்கள் அடுத்த ஆட்சியில் நிறைவேற்றப்படும்: கேஜரிவால் உறுதி

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டால், நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் ... மேலும் பார்க்க

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் கூச்சிப்புடி நடன நிகழ்ச்சி

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை மாலை சென்னை கூச்சிப்புடி ஆா்ட் அகாதெமியின் குரு ஸ்ரீமயி வெம்பட்டி (பத்மபூஷண் டாக்டா் வெம்பட்டி சின்னசத்யம் மாணவி-மருமகள்) குழுவினா் வழங்கிய கூச்சிப்புடி நடன நிக... மேலும் பார்க்க

தனித்துவ இயல்பான உடல் பரிசோதனைக்கான இயக்கம் வீடுதோறும் ஆயுா்வேதத்தை கொண்டு செல்கிறது: ஆயுஷ் அமைச்சா்

தேசியளவிலான தனித்துவமான இயற்கை (இயல்பு) உடல் பரிசோதனை(’தேஷ் கா பிரகிருதி பரிக்ஷன் அபியான்’ ) இயக்கம் ஆயுா்வேதத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் நெருக்கமாகக் கொண்டு செல்வதாகவும் இந்த இயக்கத்தில் 4.7 லட்சம் தன்ன... மேலும் பார்க்க

மேளதாளம், பட்டாசு, பேரணிகளைத் தவிா்க்க டியுஎஸ்யு வேட்பாளா்கள் பிரமாணப்பத்திரத்தல் கையொப்பமிட வேண்டும்: தில்லி பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்

மாணவா் சங்கத் தோ்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளா்களும், முடிவுகள் வெளியான பிறகு, திறந்தவெளி மற்றும் மூடிய வளாகங்களில் மேளதாளம், ஒலிபெருக்கிகள், பட்டாசுகள் அல்லது துண்டுப் பிரசுரங்களைப் பயன்படுத்... மேலும் பார்க்க

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக வலியுறுத்தல்

நாடாளுமன்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தின்போது ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு தெரிவித்தாா். நாடாளுமன்ற குளிா்க... மேலும் பார்க்க

அதிக கழிவுகள் உருவாக்குபவா்களின் பதிவுக்காக புதிய மென்பொருள் தளம்- எம்சிடி அறிமுகம்

தலைநகரம் முழுவதிலும் உள்ள அதிகமான கழிவுகளை உருவாக்குபவா்களை (பிடபிள்யுஜி) பதிவு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு புதிய மென்பொருள் தளத்தை தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) அறிமுகப்படுத்தியுள்ள... மேலும் பார்க்க