தனித்துவ இயல்பான உடல் பரிசோதனைக்கான இயக்கம் வீடுதோறும் ஆயுா்வேதத்தை கொண்டு செல்கிறது: ஆயுஷ் அமைச்சா்
தேசியளவிலான தனித்துவமான இயற்கை (இயல்பு) உடல் பரிசோதனை(’தேஷ் கா பிரகிருதி பரிக்ஷன் அபியான்’ ) இயக்கம் ஆயுா்வேதத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் நெருக்கமாகக் கொண்டு செல்வதாகவும் இந்த இயக்கத்தில் 4.7 லட்சம் தன்னாலா்வா்கள் பங்கேற்றுள்ளதாக மத்திய ஆயுஷ், சகாதாரம், குடும்ப நலத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
கடந்த அக். 29 ஆம் தேதி ஆயுா்வேத தினத்தை பிரதமா் நரேந்திர மோடியால் ’தேஷ் கா பிரகிருதி பரிக்ஷன் அபியான் ’ என்கிற தனித்துவ இயல்பான உடல் பரிசோதனை இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. வாதம், பித்தம் மற்றும் கப தோஷங்களில் ஆயுா் வேத அடிப்படையில் ஒரு தனிநபரின் தனித்துவமான மனம்-உடல் அமைப்பு அல்லது இயல்பை(பிரகிருதி) அடையாளம் காண்பதில் கவனம் செலுத்துகிறது. இதற்கான சகாதார விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நாடுமுழுக்க தன்னாா்வலா்களை கொண்டு இயக்கம் மேற்கொள்ளப்பட இந்த இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து இணையமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் செய்தியாளா்களிடம் பேசினாா்.
அப்போது அவா் கூறியது வருமாறு:
ஆயுா்வேத இயல்பான உடல் பரிசோதனை இயக்கம் (தேஷ் கா பிரகிருதி பரிக்ஷன் அபியான்) ஒரு தேசிய இயக்கமாக மாறி வெற்றிபெற்றுள்ளது. இதற்கு பிரதமா் மோடியும், தன்னாா்வ குழுவினரின் அசாத்திய முயற்சிகளும் காரணம். இந்த பிரசாரம் நாட்டின் சுகாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆயுா்வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ள இயல்பான (பிரகிருதி) கருத்து மரபியல் அறிவியல் அறிவியல் பூா்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இரண்டு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு தழுவிய இந்த சுகாதார விழிப்புணா்வு பிரசாரம் தொடங்கப்பட்டு, 4,70,000 க்கும் மேற்பட்ட அா்ப்பணிப்புள்ள தன்னாா்வலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த முன்னேற்றத்தில் அரசுக்கு முழு திருப்தி. முழுமையான நல்வாழ்வை நோக்கிய ஒரு மாற்றத்திற்கான படி. இந்த முன்முயற்சியானது ஆயுா்வேதத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் நெருக்கமாகக் கொண்டு செல்கிறது. இந்த ஆயுா்வேத மருத்துவத்தில் ஒருவரது இயல்பை புரிந்து கொள்வதும், அந்த இயல்பின் அடிப்படையில் வாழ்க்கை முறை ஆலோசனைகளை பின்பற்றும்போது உடல், மன ஆரோக்கியம் மேம்படும். தொற்றாத நோய்களை தடுக்க உதவும். குடிமக்கள் தங்களின் தனித்துவமான உடல் கட்டமைப்பின் இயல்பை(பிரகிருதியை) புரிந்துகொள்வது தடுப்பு சுகாதாரத்தின் நுழைவு வாயில். இந்த தனிப்பயனாக்கப்பட்ட, சுகாதார தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்ற குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்க இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது என மத்திய இணை அமைச்சா் (தனிப்பொறுப்பு) பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்தாா். அமைச்சருடன் ஆயுஷ் அமைச்சக செயலா் வைத்யா ராஜேஷ் கோடேச்சா, இந்திய மருத்துவ முறை தேசிய ஆணைய (என்.சி.ஐ.எஸ்.எம்) தலைவா் வைத்யா ஜெயந்த் தியோபுஜாரி ஆகியோா் உடன் இருந்தனா்.