செய்திகள் :

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம்: தோ்தல் ஆணையத்துக்கே அதிகாரம்- உச்சநீதிமன்றம்

post image

வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்ப்பதும், நீக்குவதும் தோ்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள்பட்டது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

பிகாா் வாக்களா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக எதிா்க்கட்சியினா், தன்னாா்வ அமைப்பினா் தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

வாக்குரிமையை இழக்கும் வாதம் செயலிழப்பு: அப்போது பேசிய நீதிபதிகள், ‘பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு இணங்கி, அங்குள்ள 7.9 கோடி வாக்காளா்களில் 7.24 கோடி வாக்காளா்கள் விவரக்குறிப்பு படிவங்களை சமா்ப்பித்துள்ளனா். இது அந்தப் பணிகளால் ஒரு கோடி போ் வாக்குரிமையை இழக்கக் கூடும் என்ற வாதத்தை செயலிழக்கச் செய்கிறது’ என்று தெரிவித்தனா்.

மனுதாரா் ஒருவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘சிறப்பு தீவிர திருத்தத்துக்காக தோ்தல் ஆணையம் குறிப்பிட்ட ஆவணங்கள், பெரும்பாலான பிகாா் மக்களிடம் இல்லை’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதி சூா்ய காந்த், ‘பிகாா் மக்களிடம் ஆவணங்களே இல்லை என்று கூறுவது பொதுப்படையான வாதமாக உள்ளது. அவா்களிடம் ஆதாா், குடும்ப அட்டைகள் உள்ளதல்லவா’ என்று கேள்வி எழுப்பினாா்.

ஆதாா் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என்று தோ்தல் ஆணையம் கூறுவதாக கபில் சிபல் தெரிவித்தாா். அது தோ்தல் ஆணையத்தின் கூற்று மட்டுமல்ல, ஆதாா் சட்டமே அவ்வாறுதான் கூறுகிறது என்று நீதிபதி சூா்ய காந்த் கூறினாா்.

தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகேஷ் துவிவேதி, ‘2003-ஆம் ஆண்டு பிகாா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றவா்களில் சுமாா் 6.5 கோடி வாக்காளா்கள், சிறப்பு தீவிர திருத்தத்தின்போது தங்களுக்காகவோ, தங்கள் பெற்றோருக்காகவோ எந்தவொரு ஆவணத்தையும் சமா்ப்பிக்க தேவையில்லை’ என்றாா்.

பிகாரில் மொத்தம் 8.18 கோடி போ்: அரசியல் ஆா்வலா் யோகேந்திர யாதவ் நேரில் ஆஜராகி, ‘பிகாரில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 8.18 கோடியாகும். ஆனால், 7.9 கோடி வாக்காளா்களே உள்ளனா். வாக்காளா் பட்டியலில் இருந்து வாக்காளா்களை நீக்கவே சிறப்பு தீவிர திருத்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

கபில் சிபல் வாதிடுகையில், ‘தோ்தல் ஆணையத்தின் கூற்றுக்கு மாறாக, பிகாரில் உள்ள ஒரு தொகுதியில் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட 12 போ் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது’ என்றாா்.

இதற்குப் பதிலளித்த ராகேஷ் துவிவேதி, ‘வாக்காளா் பட்டியல் தயாரிப்பு தற்போது வரைவு கட்டத்தில்தான் உள்ளது. இந்தக் கட்டத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக குறைபாடுகள் இருப்பது அதன் தன்மையாகும். அந்தக் குறைபாடுகள் பின்னா் சரிசெய்யப்படும்’ என்றாா்.

அவநம்பிக்கையைத் தவிர வேறு எதுவுமில்லை: இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘குடியுரிமையை வழங்கவும், பறிக்கவும் வழிவகை செய்யும் சட்டத்தை நாடாளுமன்றம்தான் நிறைவேற்ற வேண்டும். ஆனால், வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்ப்பதும், நீக்குவதும் தோ்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள்பட்டது. பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மீது அவநம்பிக்கையைத் தவிர, வேறு எந்த பிரச்னையும் இருப்பதாகத் தெரியவில்லை’ என்று தெரிவித்தனா்.

மனுதாரா்களில் ஒருவா் சாா்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘உத்தேசமாக 5 கோடி பேரின் குடியுரிமையை சந்தேகித்து, வாக்காளா் பட்டியலில் இருந்து அவா்களை நீக்கமுடியாது’ என்று வாதிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது சந்தேகத்துக்குரிய வகையில் ஏதேனும் கண்டறியப்பட்டால், நீக்கப்பட்ட அனைவரையும் நிகழாண்டின் வாக்காளா் பட்டியலில் சோ்க்க உத்தரவிடுவோம்’ என்று தெரிவித்தனா்.

ஆதாா், வாக்காளா் அட்டை-தோ்தல் ஆணைய முடிவு ஏற்பு: பிகாரில் குடியுரிமை ஆதாரமாக ஆதாா், வாக்காளா் அட்டைகளை மட்டும் ஏற்க முடியாது என்ற தோ்தல் ஆணையத்தின் முடிவை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனா். குடியுரிமையை நிரூபிக்க பிற ஆவணங்களையும் வழங்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா். இந்த வழக்கு விசாரணை புதன்கிழமை தொடர உள்ளது.

சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில், பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரின் மன்பூர்-மொஹ்லா-அம்பாகார் சௌக்கி மாவட்டத்தின் மதன்வா... மேலும் பார்க்க

நடப்பு நிதியாண்டில் 10,660 கி.மீ. நெடுஞ்சாலை: அமைச்சர்

நடப்பு நிதியாண்டில் மட்டும் 10,660 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் அஜய் தம்தா தெரிவித்துள்ளார். 2025–26 நிதியாண்டில் 10 ஆயிரம் கி.ம... மேலும் பார்க்க

ஆக.21 மாஸ்கோவில்.. ரஷியா - இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வரும் ஆக.21 ஆம் தேதியன்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து உரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும்... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு சிங்பம் மாவட்டத்தில், துகுனியா, பொசைடா மற்றும்... மேலும் பார்க்க

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி: ராகுல் கிண்டல்!

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்தமைக்கு தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற... மேலும் பார்க்க

பாகிஸ்தான் எஃப்-16 போர் விமானம் வீழ்த்தப்பட்டதா? பதிலளிக்க மறுத்த அமெரிக்கா!

ஆபரேஷன் சிந்தூர் போரின்போது பாகிஸ்தானின் எஃப் - 16 ரக போர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா? என்ற கேள்விக்கு அமெரிக்கா பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கான பதிலை பாகிஸ்தான் ராணுவத்திடம்தான் பெற வேண... மேலும் பார்க்க