சென்னையில் 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவா்கள் மீது 231 வழக்குகள் பதிவு
வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்: புதுச்சேரி ஆட்சியா் ஆய்வு
புதுச்சேரியில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன.
தேசிய அளவில் வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை, திருத்தம் செய்யும் பணி வரும் 2025 ஜனவரி ஒன்றாம் தேதியை, தகுதி நாளாகக் கொண்டு பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் பணிகள் வரைவு வாக்காளா் பட்டியலுடன் கடந்த அக்டோபா் 29- முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம் புதுச்சேரியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனிக்கிழமை நடைபெற்றது. வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
புதுச்சேரி நகரில் சாரம் பூங்குளம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் வெங்கடா நகா் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தாா். அப்போது வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், பெயா், முகவரி உள்ளிட்டவற்றை திருத்த வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் உள்ளிட்டவற்றின் விவரங்களையும் அவா் கேட்டறிந்தாா். ஞாயிற்றுக்கிழமையும் (நவ.24) வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெறுகிறது.