செய்திகள் :

வாக்கு வங்கி அரசியலுக்காக மடிக்கணினியா? -அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

post image

அதிமுக ஆட்சியில் மடிக்கணினி திட்டம் வாக்கு வங்கி அரசியலுக்காக அமல்படுத்தப்பட்டதா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். வாக்கு வங்கி அரசியலுக்காக திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பது குறித்து பேரவையில் திமுக - அதிமுக இடையே திங்கள்கிழமை விவாதம் நடைபெற்றபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பேரவையில் அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசியதாவது:

அமைச்சர்கள் சமூக நலத் திட்டங்கள் பற்றி குறிப்பிட்டனர். எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தைக் கொடுத்தார். ஜெயலலிதா குழந்தைகளுக்கு உடையிலிருந்து மடிக்கணினி வரை அனைத்தும் கொடுத்தார். இதுவும் சமூகநலத் திட்டங்கள்தான். இந்தத் திட்டங்களால் பயன் அடைந்தவர்களின் வயது 4. ஆனால், மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வயது வாக்கு செலுத்தும் வயது. அதைப்போல கல்லூரி செல்லும் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கப் போவதாக நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளீர்கள். அவர்களுக்கும் வாக்கு செலுத்தும் வயது. சமூக மாற்றத்துக்காகக் கொண்டு வந்த திட்டங்கள் எங்களுடையது. வாக்கு வங்கிக்காக கொண்டுவரப்பட்டவை உங்களுடைய திட்டங்கள் என்றார்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு கூறியதாவது: காலை உணவு திட்டம் கொண்டு வந்துள்ளோம். வெளிநாடுகள் எல்லாம் பாராட்டும் திட்டமாக அது உள்ளது. இந்தத் திட்டத்தால் பயன்பெறும் குழந்தைகளுக்கு வாக்கு வங்கி இருக்கிறதா என்றார். அதைத் தொடர்ந்து நடந்த விவாதம்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி: முதன் முதலில் தனியார் பங்களிப்புடன் காலை உணவு திட்டம் கொண்டு வந்தது நாங்கள்தான். ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பிறகு நீங்கள் கொண்டு வந்துள்ளீர்கள்.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: இலங்கை தமிழர்கள் நல வாழ்வுக்காக 7 ஆயிரம் வீடுகள் வரை கட்டிக் கொடுத்துள்ளோம். அதற்கான நிதியையும் முதல்வர் கொடுத்துள்ளார். அவர்களுக்கு வாக்கு உரிமை இருக்கிறதா, அவர்களுக்குச் செய்வதைத் தவறு என்று சொல்கிறீர்களா? வாக்கு வங்கி அரசியலுக்காக முதல்வர் செய்வது இல்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் பார்த்து பார்த்து செய்கிறோம். எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். அதை வாங்கு வங்கிக்காக கொண்டு வந்தார் என்று சொல்ல முடியுமா? நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் பாராட்டுங்கள். பாராட்ட மனம் இல்லை என்றால் பேசாமல் அமருங்கள்.

எடப்பாடி பழனிசாமி: பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட மடிக்கணினியை ஏன் நிறுத்தினீர்கள்? மாணவர்கள் எதிர்காலத்தில் அறிவுபூர்வமாக வர வேண்டும் என்பதற்காகத்தான் மடிக்கணினியைக் கொடுத்தோம்.

தங்கம் தென்னரசு: அதிமுக ஆட்சியிலேயே அந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நிறைவேற்றவில்லை. எத்தனை பேருக்கு மடிக்கணினி அப்போது கொடுக்கப்பட்டது? மடிக்கணினியைக் கொடுத்ததாகக் கூறினீர்களே, அதை வாக்கு வங்கி அரசியலுக்காகத்தான் கொடுத்தீர்களா?

முதல்வர்: வாக்கு வங்கிக்காக திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா, இல்லையா என்ற விவகாரத்துக்குள் செல்ல விரும்பவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதல் முறையாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் திமுக ஆட்சி என்று கூறினேன். வாக்களித்தவர் மகிழ்ச்சியடை வேண்டும். வாக்களிக்காதவர்கள் வாக்களிக்க தவறிவிட்டோமே என்று வருத்தப்பட வேண்டும் என்று கூறினேன். அதே நிலையில்தான் இப்போதுதான் இருக்கிறேன். அதனால், இது தேவையில்லாத விவாதம்.

எடப்பாடி பழனிசாமி : அதிமுக ஆட்சியில் மடிக்கணினி எவ்வளவு கொடுத்தோம் என்பதுகூட நிதியமைச்சருக்குத் தெரியாமல் இருக்குமா, அவர் மறைத்துச் சொல்கிறார். சுமார் 52 லட்சம் மடிக்கணிகள் கொடுத்துள்ளோம். இடையில் கரோனா காலம் என்பதால் ஒப்பந்தம் போட முடியவில்லை. அதனால், தள்ளி வைத்தோம். திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் கொடுத்திருக்கலாம் அல்லவா?

முதல்வர்: நாங்கள் நிறுத்தவில்லை. நீங்களே நிறுத்திவிட்டுப் போய்விட்டீர்கள். மடிக்கணினி விநியோகம் செய்தவர்களால், அந்த அளவுக்கு கொடுக்க முடியவில்லை. அதனால், நிறுத்திவிட்டீர்கள். இப்போது நாங்கள் சிந்தித்து, மீண்டும் கொண்டு வருவோம் என்று கொடுக்க உள்ளோம். அதை நிறுத்தவில்லை. இவ்வாறு விவாதம்நடைபெற்றது.

பேரவையில் இன்று

சட்டப் பேரவை புதன்கிழமை (மாா்ச் 19) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை மற்றும் வேளாண் நிதிந... மேலும் பார்க்க

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? பிரேமலதா விளக்கம்

வரும் சட்டப்பேரவை தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரிவித்தாா். பிரேமலதா தனது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினாா். அதையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அல... மேலும் பார்க்க

‘முதல்வரின் கனவு இல்லம்’ திட்டத்தில் மே மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகள்: அமைச்சா் ஐ.பெரியசாமி

‘முதல்வரின் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ், ஒரு லட்சம் வீடுகள் மே மாதத்துக்குள் முழுமையாக கட்டிமுடிக்கப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி கூறினாா். சட்டப் பேரவையில் ந... மேலும் பார்க்க

திமுக நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனையில் பங்கேற்போா் யாா் யாா்?

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் ஆலோசனையில் பங்கேற்கவுள்ள தலைவா்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வரும் 22... மேலும் பார்க்க

ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை யாா் ஆட்சியில் நிறுத்தப்பட்டது?திமுக - அதிமுக விவாதம்

அரசு ஊழியா்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை தொடா்பாக பேரவையில் திமுக - அதிமுக இடையே செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. செல்லூா் ராஜூ: நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் செல்லூா... மேலும் பார்க்க

ஒளவை யாா்? பேரவையில் சுவாரசிய விவாதம்

ஒளவை யாா்? என்பது தொடா்பாக பேரவையில் சுவாரசிய விவாதம் நடைபெற்றது. சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதிமுக உறுப்பினா் ஓ.எஸ். மணியன் (வேதாரண்யம்) கேள்வி எழுப்பினாா். அப்போது நடைபெ... மேலும் பார்க்க