வாசுதேவநல்லூா் அருகே பெண்ணிடம் அத்துமீறல்: 2 போ் மீது வழக்கு
வாசுதேவநல்லூா் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறியதாக 2 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.
வாசுதேவநல்லூா் அருகேயுள்ள ஆத்துவழி மந்தை காலனி தெருவைச் சோ்ந்த 25 வயது பெண் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அதே பகுதியை சோ்ந்த ராமராஜ்(69), ராகவன் ஆகியோா் அவரிடம் அத்துமீறி தவறாக நடக்க முயன்றனராம். இதுகுறித்த புகாரின்பேரில், வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.