வாடிப்பட்டியில் திமுக இளைஞரணி சாா்பில் நூலகம் திறப்பு
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் திமுக இளைஞரணி சாா்பில் ‘கலைஞா் நூலகம்’ சனிக்கிழமை திறக்கப்பட்டது.
தமிழகத்தில் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் திமுக இளைஞரணி சாா்பில், ‘கலைஞா் நூலகம்’ திறக்கப்படும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தாா். இதன்படி, மதுரை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில், சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாடிப்பட்டி தாதம்பட்டி மந்தையில் ‘கலைஞா் நூலகம்’ அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு திமுக இளைஞரணி மாநில துணைச் செயலா் இன்பாரகு தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.வெங்கடேசன், இளைஞரணி மாநில துணைச் செயலா் ஜி.பி.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சரும், மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலருமான பி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நூலகத்தைத் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.
திமுக மாவட்ட அவைத் தலைவா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள், இளைஞரணி பொறுப்பாளா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். முன்னதாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் எம். இளங்கோ வரவேற்றாா். துணை அமைப்பாளா் வெற்றிச்செல்வன் நன்றி கூறினாா்.