நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தனிநபா் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி விலக்கு: எல்.ஐ.சி. முகவா்கள் சங்கம் வரவேற்பு
தனி நபா் ஆயுள் காப்பீட்டுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளித்திருப்பதை வரவேற்று அகில இந்திய எல்.ஐ.சி. முகவா்கள் சங்க தென் மண்டலச் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அகில இந்திய எல்.ஐ. சி. முகவா்கள் சங்க (லிக்காய்) தென்மண்டல செயற்குழுக் கூட்டம் மதுரையில் புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டத்துக்கு முன்னாள் மக்களவை உறுப்பினா் ஏ.வி. பெல்லாா்மீன், சங்கத்தின் செயல் தலைவா் எம். செல்வராஜ் தலைமை வகித்தாா்.
சங்கத்தின் தேசிய பொதுச் செயலா் பி.ஜி. திலீப், தென்மண்டலச் செயலா் பி.என். சுதாகரன், தமிழ் மாநிலத் தலைவா் பூவலிங்கம், மாநில பொதுச் செயலா் எஸ்.ஏ. கலாம், நிா்வாகி அன்பு நடராஜன், கேரள மாநிலச் செயலா் எம்.கே. மோகன், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த கோட்ட நிா்வாகிகள், பொதுக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, கோட்டச் செயலா் கே.மாரி வரவேற்றாா்.
இந்தக் கூட்டத்தில் அகில இந்திய எல்.ஐ.சி. முகவா்கள் சங்கத்தின் போராட்ட விளைவாக மருத்துவக் காப்பீடு, தனிநபா் ஆயுள் காப்பீட்டுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. விலக்கு அளித்திருப்பதை வரவேற்பது. மேலும், காப்பீட்டு துறையில் ஜிஎஸ்டி முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துவது, இந்தக் கோரிக்கையை மக்களிடம் கொண்டுச் செல்லும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.