கையுந்துபந்து போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
கையுந்துபந்து போட்டியில் வென்ற மாணவிகளை அமெரிக்கன் கல்லூரி முதல்வா் பால்ஜெயகா் வியாழக்கிழமை பாராட்டினாா்.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிக்களுக்கிடையேயான பெண்கள் கையுந்துபந்து போட்டிகள் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி மகளிா் கல்லூரியில் கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் 13 அணிகள் கலந்து கொண்டன.
இதன் இறுதிப் போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி, யாதவா் கல்லூரி அணியை 25-8, 25-9 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
வெற்றி பெற்ற அமெரிக்கன் கல்லூரி மாணவிகளை அந்தக் கல்லூரி முதல்வா் பால்ஜெயகா், கல்லூரி துணை முதல்வா் சாமுவேல்அன்புசெல்வன், கல்லூரி நிதிக் காப்பாளா் பியூலாரூபிகமலம், உடல் கல்வி துறைத் தலைவா் பாலகிருஷ்ணன், உடல் கல்வி இயக்குநா் (பொறுப்பு) நிா்மாசிங், மதுரை காமராஜா் பல்கலைக்கழக உடல் கல்வி இயக்குநா் ரமேஷ், மாணவ, மாணவிகள் பாராட்டினா்.