செய்திகள் :

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம்-கார் மோதல்: இருவர் பலி!

post image

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது55) இவர் சவுண்ட் சர்வீஸ் மற்றும் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் கலந்திரா அடுத்த குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (வயது 35) இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார்.

கடந்த 4 நாள்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று சின்னத்தம்பி பந்தல் அமைப்பதற்காக நாட்றம்பள்ளி செல்வதாக இருந்தது. இவருடன் ராமனும் சென்றுள்ளார்.

இருவரும் இன்று காலை ஒரே இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடியில் இருந்து நாட்றம்பள்ளி நோக்கி சென்ற போது நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தபோது பின்னால் சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் பின்புறமாக வேகமாக மோதியுள்ளது.

இதில் இருசக்கர வாகனம் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற ராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சின்னதம்பி படுகாயம் அடைந்தார். இருசக்கர வாகனத்தின் மீது விபத்து ஏற்படுத்திய கார் அங்கு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் சின்னத் தம்பியை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது செல்லும் வழியிலேயே சின்னத்தம்பியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உடனடியாக அங்கு வந்த தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் விபத்துக்குள்ளான இருசக்கர வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலீஸார் இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து சுங்கச் சாவடியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

திருத்தணி மார்க்கெட்டுக்கு காமராசர் பெயர்: தமிழக அரசு அறிவிப்பு!

திருத்தணி நகராட்சியில் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டடத்திற்கு "பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி" எனப் பெயரிட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்ச... மேலும் பார்க்க

எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 500, இளைஞர்களுக்கு ரூ. 5000: பாமக நிழல் பட்ஜெட்!

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 500 மானியம், படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு ரூ. 5000 உதவித்தொகை என பாமகவின் நிழல் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ள... மேலும் பார்க்க

ஒருநாள் தொப்பி அணிந்து வேடம் போடுபவன் நானல்ல: சீமான்

ஒருநாள் தொப்பி அணிந்து வேடம் போடுபவன் நானல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.திமுகவுக்கான எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பது ... மேலும் பார்க்க

தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுகவினர் போராட்டம்!

திமுக எம்.பி.க்கள் பற்றி தவறாகப் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதனுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொட... மேலும் பார்க்க

யார் அந்த சூப்பர் முதல்வர்?

சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு தேசிய கல்விக் கொள்கையில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் பேசியிருப்பது விவாவதப் பொருளாகியுள்ளது.தேசிய ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எழுப்பிய 3 கேள்விகள்!

முதல்வர் ஸ்டாலினுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.தமிழக கல்வித் துறை அமைச்சர் தலைமையில், திமுக எம்.பி.க்கள் தன்னை வந்து சந்தித்து, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வ... மேலும் பார்க்க