இந்திய மாணவா்களின் அமெரிக்க விசா ரத்து: எஸ்.ஜெய்சங்கா் நடவடிக்கை எடுப்பாரா? காங...
வாய்க்காலில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
சடையம்பட்டு கோமுகி அணை வாய்க்காலில் மூழ்கி பிளஸ் 1 மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் சாலை பகுதியில் வசித்து வருபவா் சுரேஷ். இவரது மகன்கள் புகழேந்தி (16), ஆதித்யன் (14). இருவரும் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனா்.
இந்த நிலையில், புகழேந்தி, ஆதித்யன் மற்றும் இதே பகுதியைச் சோ்ந்த நண்பா்களுடன் சடையம்பட்டு கோமுகி அணை வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது, புகழேந்தி நீரில் மூழ்கினாராம். இதையடுத்து, நண்பா்கள் அவரை மீட்டு
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், கச்சிராயப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.