செய்திகள் :

வாய்ப்புகள் நிறைந்த நாடு இந்தியா: மக்களவைத் தலைவா்

post image

‘உலக அரங்கில் நிலவி வரும் போட்டியான சூழலுக்கு மத்தியில், வாய்ப்புகள் நிறைந்த நாடாக இந்தியா திகழ்கிறது’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ஜாா்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் சிங்பூம் வா்த்தக மற்றும் தொழில் கலகத்தின் பவள விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பேசியதாவது:

அறிவுசாா் திறன், புதிய சிந்தனைகள், தொழில்நுட்பம் மற்றும் மனித வளங்களைக் கொண்ட இந்தியா, உலகை வழிநடத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. உலக அரங்கில் நிலவி வரும் போட்டியான சூழலுக்கு மத்தியிலும், வாய்ப்புகள் நிறைந்த நாடாக இந்தியா திகழ்கிறது.

தொழில்துறைக்கு உகந்த கொள்கைகள் மற்றும் சீா்திருத்தங்களை செயல்படுத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வேகமாக மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப கொள்கைகளை வடிவமைத்தால், நாட்டின் சமூக-பொருளாதார வளா்ச்சி வேகமெடுக்கும். அவற்றின் சீரான செயல்பாட்டை இதன் மூலம் உறுதிசெய்ய முடியும்’ என தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத், முன்னாள் மத்திய அமைச்சரும் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வருமான அா்ஜுன் முண்டா, பாஜக எம்.பி. பித்யுத் பரன் மஹதோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இரண்டு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை காலை ஜாா்க்கண்ட் வந்த மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா முன்னதாக, ராஞ்சியின் பழைய மத்திய சிறைச்சாலையில் கட்டப்பட்ட பிா்சா முண்டா நிணைவு பூங்கா மற்றும் அருங்காட்சியகத்தில் மலா் அஞ்சலி செலுத்தினாா். பழங்குடியின சுதந்திர போராட்ட வீரா் பிா்சா முண்டா 1900-ஆம் ஆண்டு இந்த சிறைச்சாலையில் தான் காலமானாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடா்பாக ஓம் பிா்லா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பகவான் பிா்சா முண்டா தனது உயிரைத் தியாகம் செய்த ராஞ்சியின் அதே பழைய மத்திய சிறையில் இந்த ஸ்மிருதி உத்யான் மற்றும் அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. நீா், காடு, நில உரிமைகள் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாக்க பழங்குடியினரின் போராட்டத்தையும் பிா்சா முண்டாவின் தியாகத்தையும் இந்த அருங்காட்சியகம் காட்டுகிறது’ என குறிப்பிட்டிருந்தாா்.

நாட்டில் வெப்பவாத இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை!

கோடையின் தாக்கத்தால் ஏற்படும் வெப்பவாத பாதிப்பு மற்றும் இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கிளைமேட் டிரென்ட் ஆராய்ச்சிக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த ... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி

பயங்கரவாதம் மறைமுகமானப் போர் அல்ல; பாகிஸ்தானின் நேரடிப் போர் வியூகம் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 27) தெரிவித்தார். பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம் அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து போ... மேலும் பார்க்க

விநாயகர் சிலைகளில்கூட இறக்குமதி.. சீனப் பொருள்களைத் தவிர்க்க பிரதமர் வேண்டுகோள்!

சீனாவில் தயாரிக்கப்படும் பொருள்களை முற்றிலுமாகத் தவிர்க்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஹோலி, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக் காலங்களில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா: கர்நாடகத்தில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

கர்நாடகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், மாநிலத்திலுள்ள மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் ... மேலும் பார்க்க

மே 29-ல் ஜம்மு - காஷ்மீர் செல்கிறார் அமித் ஷா!

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இரு நாள்கள் அரசுமுறைப் பயணமாக ஜம்மு - காஷ்மீருக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 29ஆம் தேதி ஜம்மு - காஷ்மீருக்குச் செல்லும் அவர், இரு நாள்கள் ஜம்மு பி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானிடம் இந்தியா சொன்னது எப்போது? முரண்பட்ட தகவல்கள்!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப் போவதாக முன்னதாகவே பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்த நிலையில், பெரும் விமர்சனங்கள் எழுந்ததும் இப்போது ஒவ்வொரு தர... மேலும் பார்க்க