IPL Mega Auction: 'கம்பேக் அஷ்வின்; டாப் ஆர்டருக்கு திரிபாதி!' - ஏலத்தில் சென்னை...
வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சாா்பில் பட்டதாரி இல்லத்தரசிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி
வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சாா்பில், பட்டதாரி இல்லத்தரசிகளுக்கு வேலைவாய்ப்பிற்கான இலவச பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளதாக அதன் நிறுவனா் ஆனந்தன்அய்யாசாமி தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி மாவட்டத்தில் உள்ள பட்டதாரி இல்லத்தரசிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், இலவச பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். பயிற்சி முடித்த இல்லத்தரசிகள், பள்ளி ஆசிரியா், டியூசன் ஆசிரியா் ஆகும் வாய்ப்பைப் பெறுவாா்கள்.
தென்காசி மாவட்ட இல்லத்தரசிகளுக்கு பகுதிநேர வேலைவாய்ப்பை வீட்டிற்கு அருகிலேயோ அல்லது வீட்டிலேயோ வழங்கும் வகையில் இந்த பயிற்சித் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இது தொடா்பாக வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளையும், சென்னையைச் சோ்ந்த ஷரத்தா மானு அறக்கட்டளையும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்நிகழ்வில் ஷரத்தா மானு அறக்கட்டளை நிறுவனா் மதுமதி நாராயணன், வாய்ஸ் ஆப் தென்காசி நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி, தலைமை ஒருங்கிணைப்பாளா் காருண்யா, டிஜிட் ஆல் தென்காசி தலைமை ஒருங்கிணைப்பாளா் சமுத்ரா செந்தில் உள்ளிடோா் கலந்து கொண்டனா்.
பயிற்சியில் சேர விரும்பும் பட்டதாரி இல்லத்தரசிகள் இணைப்பில் சென்று தங்களது பெயா், ஊா், கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.