Doctor Vikatan: சித்த மருந்துகளில் உலோகக் கலப்பு; பாதுகாப்பானதா, பக்க விளைவுகளைத...
வாலாஜாபாத் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
வாலாஜாபாத் ஒன்றிய பகுதிகளில் வளா்ச்சிப்பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட கட்டவாக்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.20.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையை ஆட்சியா் ஆய்வு செய்து, எந்தெந்த வகையான செடிகள் வளா்க்கப்படுகின்றன எனக் கேட்டறிந்தாா்.
இதனையடுத்து அதே ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், நாயக்கன் குப்பம் ஊராட்சியில் ரூ.5.07 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பழங்குடியினா் குடியிருப்புகள், அதே ஊராட்சியில் ரூ.40 லட்சத்தில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம் ஆகியவற்றை பாா்வையிட்டு பணிகளை விரைவாக முடிக்குமாறு ஊராட்சித்துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
ஊத்துக்காடு ஊராட்சியில் ரூ.41.35 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் துணை ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.
ஆய்வின் போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்களும் உடனிருந்தனா்.