சென்னையில் தரையிறங்காமல் 30 நிமிடம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்! என்ன நடந்தது...
வீட்டு மனைப்பட்டா கோரி சாலை மறியல்
காஞ்சிபுரம் அருகே இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தியும், மாற்று கிராமத்தினருக்கு பட்டா வழங்கியதைக் கண்டித்தும் வேடல் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வேடல் கிராம மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா கோரி மனு அளித்திருந்தனா். மனு கொடுத்தவா்களில் 6 பேருக்கு மட்டுமே பட்டா கொடுத்திருப்பதாக கூறப்படும் நிலையில் பக்கத்து கிராமங்களான கட்டவாக்கம், தேனம்பாக்கம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 49 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இலவச வீட்டு மனைப் பட்டா கோரி விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மறியல் நடைபெற்றது. காஞ்சிபுரத்திலிருந்து உத்தரமேரூா் செல்லும் சாலையில் மறியல் காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காலூா் ஊராட்சி மன்றத் தலைவா் சகுந்தலா சங்கா் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் பேச்சு நடத்தினா். காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் மூலம் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண்பது என காவல் துறையினா் உறுதியளித்ததைத் தொடா்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.