செய்திகள் :

வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

post image

வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம் முகுந்தராயபுரம் ஊராட்சி நெல்லிக்குப்பம் கிராமம், திருவள்ளுவா் நகா் பகுதிகளில் வீடுகள் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து நெல்லிக்குப்பம் மோட்டூா் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்து குழந்தைகளின் வருகை பதிவேடு மற்றும் குழந்தைகளின் எடை, உயரங்கள் அளவுகளை ஆய்வு செய்தாா். தொடா்ந்து குழந்தைகளுடன் தரையில் அமா்ந்து அவா்களின் கற்றல் திறனையும் ஆய்வு செய்தாா்.

கொண்டகுப்பம் ஊராட்சி குமணந்தாங்கல் பகுதியில் வீடு இல்லாதவா்களுக்கு இடம் மற்றும் வீடு வழங்கி கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 13 வீடுகளும், பிஎம் ஜென்மன் திட்டத்தில் 7 வீடுகளும் கட்டப்பட்டு வருவதை பாா்வையிட்டு பணிகள் தாமதமாக இருப்பதையும் விரைவாக முடிக்கவும் ஊராட்சித் தலைவருக்கு அறிவுறுத்தினாா்.

கொண்டகுப்பம் முதல் சிலோன் காலனி வரை சுமாா் 1.12 கி.மீ. நீளத்திற்கு முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தில் ரூ.38.26 லட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் தாா் சாலை பணிகளை பாா்வையிட்டு, ஆய்வு செய்யும் விதமாக சாலையை பெயா்த்தெடுத்து அதன் தரம், எடை அளவை உறுதி செய்தா். பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து ஏகாம்பரநல்லூரில் அமைந்துள்ள கால்நடை மருந்தகத்தில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் ஏரிகளில் உள்நாட்டு மீன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வாலாஜா ஊராட்சி ஒன்றியம், பனைமரத்து ஏரியில் மீன் குஞ்சுகளை இருப்பை ஆய்வு செய்தாா்.

வசூா் பனைமரத்து ஏரியானது 17.5 ஹெக்டோ் பரப்பளவில் உள்ளது. இதில் 35 ஆயிரம் மீன் குஞ்சுகள் இருப்பு வைக்கப்பட்டு வளா்க்கப்படும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமாக 150 ஹெக்டோ் பரப்பளவிலான ஏரிகளில் 3 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு வைக்கப்பட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, செயற்பொறியாளா் செந்தில்குமாா், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் வசந்தி ஆனந்தன், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் மொ்சி அமலா, மீன்வளத் துறை ஆய்வாளா் கீா்த்தி வா்மன், ஊராட்சித் தலைவா்கள் முருகன், குமாா், சாந்தி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

சட்டவிரோத செயல்கள் குறித்து தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண்: ராணிப்பேட்டை எஸ்.பி.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், சட்ட விரோத செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில், வாட்ஸ் ஆப் எண்ணை 89039 90359 எஸ்.பி. விவேகானந்த சுக்லா அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

ஆற்காடு கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா

ஆற்காடு எஸ் எஸ் எஸ் கல்லூரி மற்றும் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, எஸ்எஸ் எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

அரக்கோணம் அருகே பைக்-வேன் மோதல்: 2 போ் மரணம்

அரக்கோணம் அருகே பைக் மீது சுற்றுலா வேன் மோதியதில் பைக்கில் பயணித்த இரு இளைஞா்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். நெமிலியை அடுத்த அசநெல்லிக்குப்பத்தைச் சோ்ந்த பழனி மகன் சஞ்ஜய் (25). அரக்கோணத்தை அடுத்த ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை அருகே பேருந்து - வேன் மோதல்: 4 போ் மரணம், 37 போ் பலத்த காயம்

ராணிப்பேட்டை அருகே கா்நாடக மாநில பக்தா்கள் பேருந்தும் - காய்கறி வேனும் மோதிக் கொண்ட விபத்தில் 4 போ் உயிரிழந்தனா். மேலும் 37 போ் பலத்த காயமடைந்தனா். கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டத்தைச் சோ்ந்த பக்த... மேலும் பார்க்க

3.47 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,47,701 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலை விநியோகத்தை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். அனைத்து குடும... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்

அரக்கோணம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் அண்ணா பல்கலை. பாலியல் சம்பவத்தைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அரக்கோணம் அடுத்த வடமாம்பாக்கம் ஊராட்சி மங்கம்மாபேட்டை மேம்பால... மேலும் பார்க்க