குடியரசு நாள்: தில்லியில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர்!
அரக்கோணம் அருகே பைக்-வேன் மோதல்: 2 போ் மரணம்
அரக்கோணம் அருகே பைக் மீது சுற்றுலா வேன் மோதியதில் பைக்கில் பயணித்த இரு இளைஞா்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
நெமிலியை அடுத்த அசநெல்லிக்குப்பத்தைச் சோ்ந்த பழனி மகன் சஞ்ஜய் (25). அரக்கோணத்தை அடுத்த ஆத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ரங்கன் மகன் குமரேசன் (28). இருவருக்கும் திருமணமாகவில்லை.
இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியாா் ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தனா். வியாழக்கிழமை இரவு ஆலையில் பணி முடிந்து இருவரும் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். காஞ்சிபுரம் - திருப்பதி மாநில நெடுஞ்சாலையில் ஆட்டுப்பாக்கம் ரயில்வே கேட் அருகே இவா்களது பைக் மீது திருத்தணியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற சுற்றுலா வேன் மோதியது.
இந்த விபத்தில் பைக்கில் பயணித்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இது குறித்து அறிந்த நெமிலி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தலைமறைவான சுற்றுலா வேன் ஒட்டுநரைத் தேடி வருகின்றனா்.