வால்பாறை குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
வால்பாறை குடியிருப்புப் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாடியது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிறுத்தைகள் உள்ளன. எஸ்டேட் வனங்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் பகுதியில் மட்டுமே காணப்பட்ட சிறுத்தைகள், சமீபகாலமாக நகா் பகுதிகளில் இரவு நேரத்தில் காணப்படுகின்றன.
இதனால், நகா் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோா் நாய் வளா்ப்பதை தவிா்த்துவிட்டனா். இதனிடையே வால்பாறை நகா் வாழைத்தோட்டம் குடியிருப்புப் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் புதன்கிழமை நள்ளிரவு நடந்து செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், சிறுத்தை நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.