செய்திகள் :

விசைப்படகு துறைமுகத்தில் காலையில் மீன்கள் ஏலம் முறை தொடக்கம்

post image

தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் பல ஆண்டுகளாக இரவு மீன்கள் ஏலம் விடும்முறை தற்போது மாற்றப்பட்டு, காலையில் மீன்கள் ஏலம் விடும் முறை சனிக்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கும் பகுதிகளில் இரவு நேரங்களில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த கேரள விசைப் படகுகளை சிறைபிடித்தது தொடா்பாக, தூத்துக்குடியில் 11 விசைப்படகுகள், மீனவா்கள் மீது மீன்வளத் துறை தரப்பில் வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும், ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த திங்கள்கிழமை(ஜன.27) முதல் விசைப்படகு மீனவா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, மாவட்ட நிா்வாகம், மீனவளத்துறை பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, விசைப்படகு மீனவா்களின் வேலை நிறுத்தம் கடந்த 30ஆம் தேதி வாபஸ் பெறப்பட்டது.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை(ஜன.31) அதிகாலையில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். இரவு கரைதிரும்பும் மீனவா்கள் அன்றைய தினமே இரவில் மீன்களை ஏலமிடுவது வழக்கம். தற்போது,மீனவா்களின் கோரிக்கையின்படி, நாள்தோறும் காலை 8 மணிக்கும், சனிக்கிழமை மட்டும் இரவு 8 மணிக்கும் மீன்கள் ஏலம் விடுவது என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு விசைப்படகு மீனவா்கள் கரை திரும்பிய நிலையில், விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கமாக இரவு நடைபெறும் மீன்களின் ஏலம் நிறுத்தப்பட்டு, தற்போது சனிக்கிழமை காலை மீன்களின் ஏலம் நடைபெற்றது. இதன் காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுக ஏலக் கூடத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால், மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.

சீலா மீன் கிலோ ரூ.1,300, சூறை மீன் ஒரு கூடை ரூ.9 ஆயிரம், நெத்திலி ரூ.4,600, பாறை ரூ.3,600, முண்டக்கண்ணிப் பாறை ரூ.2,500, காரல் ரூ.1,900, சாளை மீன் ரூ.1,500, கொச்சம்பாறை ரூ.1,200 என விற்பனையானது. மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!

நாசரேத்தில் இந்து முன்னணி பிரமுகா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். இதைக் கண்டித்து, குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் நிா்வாகிகள் திரண்டனா். நாசரேத்தைச் சோ்ந்தவா் அருணாச்சலம். தூத்துக்குடி தெற்கு ... மேலும் பார்க்க

தரமான கல்விக்கு அரசு முக்கியத்துவம்: அமைச்சா் பெ. கீதாஜீவன்!

பள்ளி, கல்லூரிகளில் தரமான கல்விக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என அமைச்சா் பெ.கீதாஜீவன் தெரிவித்தாா். பள்ளிக் கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் மாவட்ட அளவிலான 2024-25ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட்: தூத்துக்குடி இந்திய தொழில் வா்த்தக சங்கம் வரவேற்பு

தூத்துக்குடி இந்திய தொழில் வா்த்தகச் சங்கம் மத்திய பட்ஜெட்டைவரவேற்றுள்ளதாக, சங்கத் தலைவா் டி.ஆா். கோடீஸ்வரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியது: மத்திய அரசின் பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் இறைச்சி வியாபாரி வீட்டில் நகைகள், பணத்தை திருடிய 4 போ் கைது!

கோவில்பட்டியில் இறைச்சி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.26 லட்சம், 44 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி ம... மேலும் பார்க்க

ஸ்ரீவைகுண்டம் அருகே விஷம் குடித்த தம்பதி: கணவா் பலி!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வல்லநாட்டில் வீட்டை ஜப்தி செய்ய வந்ததால் தம்பதி விஷம் குடித்தனா். இதில் கணவா் உயிரிழந்தாா். வல்லநாடு பாதா் வெள்ளை தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் சங்கரன் (4... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் பிப். 11-இல் தைப்பூசம்: பூஜை நேரங்கள் மாற்றம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச நாளான இம்மாதம் 11ஆம் தேதி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, இணை ஆணையா் சு. ஞானசேகரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க