செய்திகள் :

'விஜய் எங்கள் வீட்டு பையன்; அதிமுக தந்த கடிதத்தை நாகரிகம் கருதி..!' - கூட்டணி குறித்து பிரேமலதா

post image

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் இன்று (ஜூன் 11) ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "தேர்தலுக்கான பணிகளை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.

கட்சி நிர்வாகிகள், கழகம் மேம்பட எப்படி செயல்பட வேண்டும் என்று கலந்து ஆலோசித்தோம். எல்லா முடிவுகளையும் எடுத்தப் பிறகு நானும், விஜயபிரகாரனும் பிரசாரத்தை மேற்கொள்வோம்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

இப்போது கூற முடியாது

நாங்கள் தனித்து போட்டியிடுகிறோமா? அல்லது கூட்டணி வைக்கிறோமோ? என்பதை இப்போது கூற முடியாது.

தனித்து போட்டியிடுவோமா? என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும். நாங்கள் எத்தனையோ தேர்தல்களை, இடைத்தேர்தல்களைத் தனியாகவே களம் கண்டவர்கள். எல்லாவற்றிருக்கும் தயாராக இருக்கிறோம்.

நாகரிகம் கருதி...

மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக எழுதி தந்த கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடாமல் இருக்கிறோம். தற்போதைக்கு கட்சியின் வளர்ச்சியில்தான் கவனம் செலுத்த உள்ளோம். அதனால் கூட்டணி குறித்து உடனே கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது. விரைவில் அறிவிப்போம்" என்றிருக்கிறார்.

விஜய் - பிரேமலதா விஜயகாந்த்
விஜய் - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவுடன் தவெக கூட்டணி வைக்குமா? என்ற கேள்விக்கு, "தேமுதிகவுடன் தவெக கூட்டணி வைக்குமா? என விஜயிடம்தான் கேட்க வேண்டும். இன்று அவர் அரசியல் கட்சி ஆரம்பித்து இருக்கலாம். நடிகராவதற்கு முன்பே அவர் எங்கள் வீட்டு பையன். அரசியல் நிலைப்பாடு குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும் " என்று பதிலளித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'ஒரே பாடலில் முதலமைச்சர் ஆக முடியாது விஜய்!' - எச்சரிக்கும் மருது அழகுராஜ் | பேட்டி

நமது எம்.ஜி.ஆர், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ். விஜய்க்கும் தவெகவுக்கும் ஆதரவாக கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தார். விஜய்யின் கட்சியில் விரைவில் இணையப்போகிறார் என்றெல்லாம் ... மேலும் பார்க்க

Vijay: "இளைய காமராஜர்னு சொல்லாதீங்க; தேர்தல் பற்றி பேச வேண்டாம்" - மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு

தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழாவை, அதன் தலைவர் விஜய் நடத்தி வருகிறார். 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களைத் தொகுதிவாரியாக அழைத்துப் பாராட்டி வருகிறார்.Vijayஇரண்டுக... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash : 'அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை...' - விஜய் வருத்தம்!

'தவெக கல்வி விழா!'தவெக தலைவர் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களை பாராட்டும் வகையில் கல்வி விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறார். மாமல்லபுரத்தில் நடந்த இந்த நிகழ்வில் அகமத... மேலும் பார்க்க

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்; 'இன்னும் ஒரு போரா?' - கைவிரித்த அமெரிக்கா; என்ன நடக்கிறது?

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது.நேற்று இரவு, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கிறது. ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிடுமோ என்கிற இஸ்ரேலின் அச்சம்தான் இந்தத் த... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash : பறவை மோதியதா இல்லை மனித தவறா? | Detailed Technical Explanation

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்திருக்கின்றனர். இந்த விபத்து எப்படி நடந்தது? அவசரகாலங்களில் பயணிகளைக் காப்பாற்ற விமானிகள் என்ன மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவா... மேலும் பார்க்க