செய்திகள் :

"விஜய் பாஸ் மார்க் வாங்க வேண்டுமென்றால் அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்க வேண்டும்" - ராஜேந்திர பாலாஜி

post image

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், ``வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-விற்கும், த.வெ.கவிற்கு 2 வது இடத்திற்குதான் போட்டி. 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அமர்வது உறுதி. டிசம்பர் மாதத்திற்குப் பின்பு ஒரு அலை உருவாகும் எடப்பாடி பழனிசாமியின் பின்பு மக்கள் திரள்வார்கள். களத்தில் அ.தி.மு.க-வை எதிர்க்கின்ற சக்தி யாருக்கும் கிடையாது. பிரச்னை என்று சொன்னால் வீதிக்கு வந்து போராடக்கூடிய போர்க்களம் படைத்தவர்கள் அ.தி.மு.க தொண்டர்கள். தேர்தல் யுத்தக் களத்தில் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க கூட்டணிக்கு வலிமை சேர்க்கும் விதமாக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பாதயாத்திரை செல்வதற்கு அவருக்கு வாழ்த்துக்கள் இது வரவேற்கத்தக்கது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

தி.மு.க செய்யக்கூடிய அனைத்து சதிகளையும் முறியடித்து எடப்பாடி பழனிசாமி துருவ நட்சத்திரமாக அரசியல் வானில் ஜொலிப்பார். தமிழ்நாட்டு மக்கள் விரும்பக்கூடிய நல்லாட்சி தருவார். ஓபிஎஸ், டிடிவி இணைப்பு சம்பந்தமாக எந்த முடிவாக இருந்தாலும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் எடுப்பார். அதிகாரம் கண்ணை மறைக்கின்ற வார்த்தைகளை விடுகின்ற இன்றைய தி.மு.க தலைவர்களுக்கு 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு பாடமாக, படிப்பினையாக அமையும். விஜயகாந்த் தே.மு.தி.க ஆரம்பிக்கும்போது மதுரையில் அவருக்கு கூடிய கூட்டம் மிகப்பெரிய கூட்டம். விஜயகாந்த்துக்கு பக்குவப்பட்ட தொண்டர்கள் இருந்தார்கள் ஆனால் விஜய்க்கு பக்குவப்பட்ட தொண்டர்கள் இதுவரை உருவாகவில்லை. விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை.

விஜய்க்கு கூடும் கூட்டத்தை விட தல அஜித் வந்தால் இரண்டு மடங்கு கூட்டம் கூடும். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கூடாத கூட்டமா ஏர்போர்ட்டில் வந்து ரஜினி நின்றால் 5 லட்சம் பேர் கூடுவார்கள். ரஜினிக்கு இன்றும் அந்த மாஸ் இருக்கிறது. திரை நட்சத்திரங்கள் நேரில் எப்படி இருக்கிறார்கள் என்று நாங்களே பார்ப்போம். விஜய் தனித்து நின்று ஜெயிப்போம் என்று கூறுவது இந்தக் காலத்தில் மட்டுமல்ல எந்தக் காலத்திலும் நடைபெறாத ஆசை. அவர் முயற்சி எல்லாம் வீணாகும். அவர் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்றால் எடப்பாடியார் அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால் இந்தத் தேர்தல் முடிந்தபிறகு த.வெ.க-வை தி.மு.க முடித்து விடும். அதனால் விஜய் நன்றாக யோசித்து அ.தி.மு.க கூட்டணிக்கு வரவேண்டும்.

ராஜேந்திர பாலாஜி

விஜய் தி.மு.கவை எதிர்ப்பது உண்மையாக இருந்தால், தி.மு.க ஆட்சியைத் தூக்கி எறிவேன் என்று விஜய் சொல்வது உண்மையாக இருந்தால் அவர் அ.தி.மு.க கூட்டணியைத்தான் நாடி வரவேண்டும் அதுதான் விஜய்க்கு சரியான முடிவு. விஜய் தனித்து நின்று களம் காண்போம் என்று கூறுவது திமுகவிற்கு வலுசேர்க்கும் விதமாகத்தான் தமிழக மக்கள் பார்ப்பார்கள். அந்த நேரத்தில் தி.மு.க-விற்கு மாற்றாக அ.தி.மு.க-வை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். ஸ்டாலினுக்கு மாற்றாக எடப்பாடி பழனிசாமியை தான் முதலமைச்சராக தேர்ந்தெடுப்பார்கள். இது தான் தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நடக்கும்." என்றார்

Vijay: ``வசனம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு; ஆனா..." - விஜய்க்கு வானதி சீனிவாசன் பதிலடி

பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கோவையில் மீண்டும் பத்துக்கு, பத்து தொகுதிகளில் வெல்லப் போவது தேசிய ஜனநாயக கூட்டணி தா... மேலும் பார்க்க

"அதிமுக-வும், பாஜக-வும் ராமர், லட்சுமணன் போல" - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

திமுக, தங்களுக்கு வேண்டுமென்றால் பாஜகவிற்கு வெண்குடை பிடிப்பார்கள், வேண்டாம் என்றால் கருப்பு பலூன் விடுவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் துணை எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் கடுமையாக... மேலும் பார்க்க

பீகார்: "பிரதமரின் தாய் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறார்" - பாஜக பகிரும் வீடியோவின் பின்னணி என்ன?

பீகாரில், சமீபத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில், வாக்காளர் அதிகார யாத்திரை நடைபெற்றது. அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பிரதமர் மோடியை தாயை அவமதிக்கும் வகையில் பேசி... மேலும் பார்க்க

VCK: "விஜய்க்கு அந்த துணிச்சல் இருக்கிறதா?"- ஆளூர் ஷாநவாஸ் கேள்வி

கடந்த வாரம் அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார் தவெக தலைவர் விஜய். திருச்சி, அரியலூரில் அவரைக் காண வந்த கூட்டம் தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. 'ரசிகர்கள் கூட்டத்தின் ஓட்டு, வாக்காக மாறுமா... மேலும் பார்க்க

"தவெக-வுடன் பாஜகவை ஒப்பிட்டுப் பேச வேண்டாம்" - நயினார் நாகேந்திரன் சொல்லும் காரணம் என்ன?

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஆலோசனை... மேலும் பார்க்க

TVK: "ஆள் வைத்து நம்மைப் பற்றி பொய்யான கதையாடல்களைச் செய்வோர் அஞ்சுகின்றனர்" - விஜய் தாக்கு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இரண்டாவது வாரமாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் நேற்று அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.நகையில் முதல்வர் ஸ்டாலினைத் தாக்கிப் பேசிய விஜய், "வெளிநாடு சென்று டூர் ... மேலும் பார்க்க