விடாமுயற்சி புதிய பாடல்!
நடிகர் அஜித் குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படத்தின் புதிய பாடலை வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் ’விடாமுயற்சி’. இந்தப் படத்தில் மங்காத்தா படத்திற்குப் பிறகு நடிகை திரிஷா அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார்.
நடிகர் அர்ஜுன், ஆரவ், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
முன்னதாக, சவதீகா பாடல் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். இதுவரை, 1 கோடி பார்வைகளைக் கடந்து வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: நடிகா் ரவி - ஆா்த்தி விவாகரத்து வழக்கு: சமரச பேச்சுக்குப் பிறகு விசாரிக்கப்படும் -நீதிமன்றம்
முழுக்கதையும் அஜர்பைஜானில் நடைபெறுவது போன்ற காட்சிகள், ஒளிப்பதிவின் தரம் என ஹாலிவுட் படம்போல் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இப்படத்தின் புதிய பாடலான, “பத்திகிச்சு” பாடலை வெளியிட்டுள்ளனர். அனிருத் இசையமைத்து பாடிய இப்பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார்.