RCB vs PBKS : 'எங்களோட பேட்டிங்லதான் பெரிய பிரச்சனை இருக்கு!' - கேப்டன் ரஜத் பட்...
விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறக் கோரி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா்கள் இடிமுரசு இலக்கணன், கோ. ஜெய்சங்கா் உள்ளிட்டோா் தலைமை வகித்தனா். மாநிலத் துணைப் பொதுச் செயலா் சா. ரஜினிகாந்த் கண்டன உரையாற்றினாா். மேயா் சண். ராமநாதன், முன்னாள் மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.