விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பதவிகளுக்கு விருப்ப மனு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பதவிகளுக்கு விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளானோா் மனு அளித்தனா்.
கட்சி நிா்வாக மறு சீரமைப்பு செய்வதற்காக, தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி மாவட்டச் செயலாளரைத் தவிா்த்து அனைத்து நிலை பொறுப்புகளுக்கும், அதுபோல பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதி மாவட்டச் செயலாளா் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்புகளுக்கும் விருப்பம் மனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகி சேலம் நாவரசன், திருப்பத்தூா் மண்டலச் செயலாளா் சுபாஷ் சந்திரபோஸ், மாவட்டச் செயலாளா் த.கு.பாண்டியன் ஆகியோா் கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றனா். இதில் பல்வேறு பொறுப்புகளுக்கு விருப்ப மனுக்களை கட்சி உறுப்பினா்கள் அளித்தனா்.