செய்திகள் :

விண்வெளியில் இருந்தும் அமெரிக்காவைத் தாக்க முடியாத கோல்டன் டோம்! டிரம்ப் அறிவிப்பு!

post image

உலகின் எந்த பகுதியில் இருந்து அமெரிக்காவைத் தாக்கினாலும் இடைமறித்து அழிக்கக் கூடிய கோல்டன் டோம் குறித்த அறிவிப்பை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் ஏராளமான அதிநவீன வான் பாதுகாப்பு அம்சங்கள் அமெரிக்காவிடம் ஏற்கெனவே உள்ளன. இடைமறித்து நடுவானிலேயே தாக்கி அழிக்கும் தளவாடங்களும் இருக்கின்றன.

இந்த நிலையில், அதிநவீன உலகில் வான் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ’கோல்டன் டோம்’ என்ற வான் பாதுகாப்பு திட்டத்தை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தின் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், 175 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பின்படி, கிட்டத்திட்ட ரூ. 15 லட்சம் கோடி) செலவில் கோல்டன் டோம் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கான வடிவமைப்பு இறுதியாகிவிட்டதாகவும், தனது பதவிக் காலம் முடிவதற்கு முன்னதாக (2029-க்குள்) இந்த கோல்டன் டோம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

முற்றிலும் அமெரிக்காவிலேயே வடிவமைக்கப்படவுள்ள இந்த கோல்டன் டோம் திட்டத்தை விண்வெளித் துறையின் துணைத் தலைவர் மைக்கேல் கட்லெயின் மேற்பார்வையிடவுள்ளார்.

கோல்டன் டோம் கட்டிமுடிக்கப்பட்ட பிறகு உலகின் எந்த மூலையில் இருந்து அமெரிக்காவைத் தாக்கினாலும், ஏன் விண்வெளியில் இருந்து தாக்கினாலும் இடைமறித்து அழிக்கக்கூடிய வல்லமையை அமெரிக்கா பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

கோல்டன் டோம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப்.

கோல்டன் டோம் சிறப்பம்சங்கள்

  • ஹமாஸ் படை தாக்குதல் நடத்தியபோது, இரும்பு டோமை பயன்படுத்தி இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொண்டது, அதனடிப்படையில் நவீன தொழில்நுட்ப அம்சங்கங்களுடன் கோல்டன் டோமை கட்டமைக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.

  • இரும்பு டோம் குறுகிய தொலைவில் இருந்து குறைவான வேகத்தில் ஏவப்படும் ஏவுகணைகளை அழிக்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து கோல்டன் டோம் முற்றிலும் வேறுபட்டதாக அமைக்கப்படவுள்ளது.

  • ரஷியா, சீனா போன்ற நாடுகள் வைத்திருக்கும் கண்டம்விட்டு கண்டம் பாயும் அதிநவீன பாலிஸ்டிக் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்படுகிறது.

  • அமெரிக்காவை குறிவைத்து ஏவப்படும் அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை துல்லியமாகக் கண்டறிந்து, நடுவானிலேயே அழிப்பதற்காக கோல்டன் டோமை பல செயற்கைக்கோளுடன் இணைக்க திட்டமிட்டுள்ளனர்.

  • இதன்மூலம், விண்வெளியில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தினாலும் அதனை இடைமறித்து, கோல்டன் டோம் தாக்கி அழிக்கும்.

  • அமெரிக்காவைவிட 400 மடங்கு நிலப்பரப்பில் சிறிய இஸ்ரேல், அதன் தட்டையான பாலை வனப்பகுதியை எளிதாக இரும்பு டோம் மூலம் தற்காத்து வருகின்றது.

  • அமெரிக்கா தனது நிலப்பரப்புக்கு ஏற்றவாறு இரும்பு டோம்-ஐ அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : காஸாவினுள் போதுமான மனிதாபிமான உதவிகளை அனுமதியுங்கள்! போப் வலியுறுத்தல்!

கிரீஸில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் கிரீட் கடலோரப் பகுதியில் 77 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்திய நேரப்படி இன்று கால... மேலும் பார்க்க

வர்த்தகத்தை முன்வைத்தே இந்தியா - பாக். மோதல் நிறுத்தம்: மீண்டும் டிரம்ப் கருத்து!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலில் வர்த்தகத்தை முன்வைத்தே தீர்வு கண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.ஏற்கெனவே, வர்த்தகத்தை முன்வைத்து எந்த பேச்சுவார்த்தையும் அமெரிக்க... மேலும் பார்க்க

ஸ்பெயின் - ரஷிய ஆதரவாளா் படுகொலை

உக்ரைன் முன்னாள் அதிபா் விக்டா் யானுகோவிச்சின் உதவியாளராக இருந்தவரும், 2014-ஆம் ஆண்டில் அவருடன் ரஷியாவுக்கு தப்பிச் சென்றவருமான ஆண்ட்ரி போா்னோவ் (51) ஸ்பெயினில் புதன்கிழமை மா்ம நபா்களால் சுட்டுக்கொல்ல... மேலும் பார்க்க

சீனா - சிபிஇசி விரிவாகக் கூட்டம்

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வா்த்தக வழித்தடத்தை (சிபிஇசி) ஆப்கானிஸ்தானுக்கும் விரிவுபடுத்துவது தொடா்பாக மூன்று நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் பெய்ஜிங்கில் புதன்கிழமை சந்தித்து ஆலோசன... மேலும் பார்க்க

ஜப்பான் - அரிசி சா்ச்சை: அமைச்சா் ராஜிநாமா

‘எனக்கு ஆதரவாளா்கள் அரிசி வாங்கித் தருவதால் அதை ஒருபோதும் நான் வாங்கியதில்லை’ என்று ஜப்பான் வேளாண்மைத் துறை அமைச்சா் டாகு எடோ தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, அவா் ராஜிநாமா செய... மேலும் பார்க்க

ஈரான் - தூதரகத்தை தாக்கியவருக்குத் தூக்கு

டெஹ்ரானில் உள்ள அஜா்பைஜான் தூதரகத்தில் கடந்த 2023-இல் தாக்குதல் நடத்தியவா் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டாா். இது தனிப்பட்ட பிரச்னையால் நடந்த தாக்குதல் என்று ஈரான் கூறியது; எனினும் தங்களுக்கு எதிரான மதவாத... மேலும் பார்க்க