செய்திகள் :

விண்வெளியில் இருந்து இந்தியா எப்படி தெரிந்தது? சுனிதா வில்லியம்ஸ் பதில்!

post image

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய பிறகு முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து சுனிதா வில்லியம்ஸ் பேசியுள்ளார்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாள்கள் தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 விண்வெளி வீரா்கள் கடந்த மார்ச் 19 ஆம் தேதி பத்திரமாக பூமி திரும்பினர்.

அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு கடந்த 10 நாள்களாக ஓய்வில் இருந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸும் புட்ச் வில்மோரும் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்து திங்கள்கிழமை பேசினர்

அப்போது விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு இந்தியா எப்படி இருந்தது என்ற செய்தியாளரின் கேள்விக்கு சுனிதா வில்லியம்ஸ் பதிலளித்தார்.

“விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு இந்தியா அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இமயமலைக்கு மேல் நாங்கள் வரும்போது, புட்ச் அருமையான புகைப்படங்களை எடுத்துள்ளார்.

கிழக்கிலிருந்து மும்பை, குஜராத்தின் மேல்பகுதியில் செல்லும்போது அழகிய கடற்கரையைக் கண்டோம். இரவு நேரங்களில் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை இந்தியா ஒளிரும்.

இரவிலும் பகலிலும் நம்பமுடியாத வகையில் பிரம்மிக்க வைப்பது இமயமலைதான்” என்றார்.

இதையும் படிக்க : மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சுனிதா வில்லியம்ஸ், “எனது தந்தையின் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று மக்களை சந்தித்து உற்சாகமடைவேன் என்று நம்புகிறேன்” என்றார்.

மேலும், ”ஆக்ஸியம் திட்டத்தில் இந்தியர் விண்வெளிக்குச் செல்வது மிகவும் அருமையான விஷயம். சுபன்ஷு சுக்லா ஹிரோவாக திகழ்வார். சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இந்தியா எப்படி இருக்கிறது என்பதை அவரும் கூறுவார்.

எனது விண்வெளி அனுபவத்தை இந்தியர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன். நிச்சயமாக ஒருநாள் நடக்கும். அற்புதமான ஜனநாயகம் கொண்ட இந்தியா விண்வெளியில் கால் பதிக்க நீண்ட நாள்களாக முயற்சிக்கிறது. நான் இந்தியாவுக்கு உதவுவேன்” என்றார்.

முன்னதாக, விண்வெளியில் இருந்து திரும்பிய சுனிதா வில்லியம்ஸை இந்தியாவுக்கு வர பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி: கனடா பதிலடி

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை... மேலும் பார்க்க

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் பிரதமரின் இலங்கைப் பயணம்!

ம.ஆ. பரணிதரன் இலங்கைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) முதல் மேற்கொள்ளவுள்ள மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.பிரதமரான பிறகு 2019-இல் இலங்கை... மேலும் பார்க்க

இந்திய பொருள்கள் மீது 27% வரி: அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவிப்பு

நியூயாா்க்/வாஷிங்டன்: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதன் விலையில் சராசரியாக 27 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா... மேலும் பார்க்க

வீழ்ந்தது அமெரிக்க பங்குச் சந்தை!

உலக நாடுகள் மீது அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள அதிரடி வரி விதிப்பு காரணமாக சா்வதேச பொருளாதரச் சூழல் அடியோடு மாறிவருவதால் அமெரிக்க முதலீட்டாளா்கள் அச்சத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரி விதிப்பு: உலக நாடுகள் எதிா்ப்பு

வாஷிங்டன்: பிற நாடுகள் தங்கள் பொருள்களுக்கு விதிக்கும் வரி விகிதங்களுக்கு ஏற்ப, அந்த நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு சா்வதேச அளவில் கொந்தளிப்ப... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: 3 ஆயிரம் கடந்த உயிரிழப்பு

நேபிடா: மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து ராணுவ ஆட்சியாளா்கள் வியாழக்கிழமை கூறுகையில், நிலநடுக்கத்தால் பா... மேலும் பார்க்க