செய்திகள் :

விண்வெளியில் துளிர்விட்டுள்ள இலைகள்: இஸ்ரோ சாதனை!

post image

விண்வெளியில் முளைவிட்டிருக்கும் காராமணி விதைகளில் இன்று(ஜன. 6) இலை துளிர்விட்டிருப்பதாக இந்திய விண்வெளி ஆரய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) தெரிவித்துள்ளது. அந்த புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

விண்வெளிக்கு ‘பிஎஸ்எல்வி-சி60 பிஓஇஎம்-4’ விண்கலத்தில் அனுப்பப்பட்டுள்ள விதைகள் முளைத்து அவற்றில் இலைகளும் துளிர்விட்டிருப்பது விண்வெளியில் செடி வளர்ப்பு ஆராய்ச்சியில் மைல்கல் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட காராமணி விதைகள் முளைவிட்டிருப்பதாக கடந்த இரு நாள்களுக்கு முன் இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், முளைவிட்ட காராமணியில், விரைவில் இலைகள் வளருமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது.

முதலில் ஏழு நாள்களுக்குள் விதை முளைவிடுமென விஞ்ஞானிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆச்சரியமடையும் வகையில் நான்கு நாள்களில் காராமணி விதை முளைத்திருப்பதாகவும் இஸ்ரோ தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளது.

இந்த நிலையில், விண்வெளியில் மனிதர்கள் வாழ்வது குறித்த ஆராய்ச்சியில் மேற்கண்ட சாதனையானது முக்கிய நகர்வாக அமைந்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

உ.பி.யில் ஆள்கடத்தல் நாடகம்: எழுத்துப் பிழையால் சிக்கிய குற்றவாளி!

உத்தர பிரதேச மாநிலம் ஹா்தோய் மாவட்டத்தில் ஆள்கடத்தல் நாடகத்தை நிகழ்த்திய நபா், எழுத்துப் பிழையால் சிக்கிய சம்பவம் நடந்தேறியுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் நீரஜ் குமாா் கூறுகையில்,... மேலும் பார்க்க

சீக்கியா்களுக்கு எதிரான கலவரம்: முன்னாள் காங்கிரஸ் எம்.பி. மீதான கொலை வழக்கில் ஜனவரி 21-இல் தீா்ப்பு

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமாா் மீதான கொலை வழக்கில் தில்லி உயா்நீதிமன்றம் ஜனவரி 21-ஆம் தேதி தீா்ப்பு வழங்க உள்ளது. முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் படுகொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தில... மேலும் பார்க்க

சிறைகளில் நெரிசலைக் குறைக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவுறுத்தியது. இது தொடா்பாக அனைத்து மாநில தலைமைச் செயலா்கள் மற்றும் சிறைத் துறை டி.ஜி.பி.களுக்கு உள... மேலும் பார்க்க

மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா உறுதி

‘மாலத்தீவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்த இந்தியா ஆதரவளிக்க தயாராகவுள்ளது’ என்று அந்நாட்டு அமைச்சரிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை உறுதியளித்தாா். இந்தியாவுக்கு 3 நாள் அரசுமு... மேலும் பார்க்க

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’: நாடாளுமன்ற கூட்டுக் குழு முதல்முறையாக ஆலோசனை; பாஜக-எதிா்க்கட்சிகள் கருத்து மோதல்

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம், தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக-எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. ஒரே நேர தோ்தல் நடைம... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு ஜாமீன்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு (83) உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என காவல்துறையினா் புதன்கிழமை தெரிவி... மேலும் பார்க்க