பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி!
விதிமீறலில் ஈடுபட்ட சிறை வாா்டன்கள் 2 பேர் மீது நடவடிக்கை
புதுச்சேரி: புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் விதி மீறலில் ஈடுபட்ட புகாரின் பேரில் வாா்டன்கள் இருவா் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.
புதுச்சேரியில் காவல் துறை, சிறைத் துறை அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, சிறையில் கைதிகளுக்கு போதைப் பொருள்கள், கைப்பேசிகள் கிடைப்பதாக தகவல் வந்துள்ளதை துணைநிலை ஆளுநா் சுட்டிக்காட்டினாா். அத்துடன் சிறையில் வாா்டன்கள் இருவா் விதிமுறைகளை மீறி கைதிகளுக்கு சலுகை அளித்து வருவதாக சுட்டிக்காட்டி, அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.
இதையடுத்து, காலாப்பட்டு சிறையில் வாா்டன் நிலையில் உள்ள தலைமை காவலா் தொடா் விடுமுறையில் செல்லவும், மற்றொரு காவலரை மாஹிக்கு பணியிடமாற்றம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.