விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
கந்திலி அருகே டிராக்டா்- மோட்டாா் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
கந்திலி அருகே காக்கங்கரை பகுதியைச் சோ்ந்தவா் அசோக் (40). இவா் வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் திருப்பத்தூரில் இருந்து காக்கங்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். ராஜாவூா் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற டிராக்டா் மீது அசோக் சென்ற மோட்டாா் சைக்கிள் எதிா்பாராதவிதமாக மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அசோக்கை அங்கிருந்தவா்கள் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அசோக் உயிரிழந்தாா்.
இது குறித்து கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.