குரூப் 4 தோ்வு முடிவு 3 மாதத்தில் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி தலைவர்
விம்பிள்டன் நாயகன்: ரோஜர் ஃபெடரரை முந்தி சாதனை படைத்த ஜோகோவிச்!
விம்பிள்டனில் நோவக் ஜோகோவிச் 14-ஆவது முறையாக அரையிறுதிக்குத் தேர்வாகி புதிய சாதனை படைத்துள்ளார்.
புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டிகள் ஜூன் 23 முதல் தொடங்கி ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.
லண்டனில் நடைபெறும் இந்தப் போட்டிகள் டென்னிஸ் உலகில் மிகவும் புகழ்பெற்ற தொடராக இருக்கிறது.
தற்போது, இதில் காலிறுதிப் போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் ஃபிளேவியோ கோபோலி மோதினார்கள்.
இந்தப் போட்டியில் முதல் செட்டை இழந்த ஜோகோவிச் அடித்தடுத்த செட்களில் ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 6-7 (6), 6-2, 7-5, 6-4 என்ற செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்த வெற்றியின் மூலமாக ஜோகோவிச் 14-ஆவது முறையாக விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்பாக ரோஜர் ஃபெடரர் 13 முறை முன்னேறிருந்ததே உலக சாதனையாக இருந்தது.
ஜோகோவிச் அரையிறுதியில் உலகின் நம்.1 வீரரான யானிக் சின்னரை எதிர்கொள்கிறார்.
விம்பிள்டனில் அதிகமுறை அரையிறுதிக்கு முன்னேறியவர்கள்
14: நோவக் ஜோகோவிச் [2007, 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2018, 2019, 2021, 2022, 2023, 2024, 2025]
13: ரோஜர் ஃபெடரர் [2003, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2012, 2014, 2015, 2016, 2017, 2019]
11: ஜிம்மி கான்னர்ஸ் [1974, 1975, 1977, 1978, 1979, 1980, 1981, 1982, 1984, 1985, 1987]
It's a 14th Wimbledon semi-finals for Novak Djokovic - the most of any player in the history of the Gentlemen's Singles draw.