செய்திகள் :

விராட் கோலி இன்னும் 2 சதங்கள் அடிப்பார்; முன்னாள் இந்திய வீரர் நம்பிக்கை!

post image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி இன்னும் இரண்டு சதங்கள் அடிப்பார் என முன்னாள் இந்திய வீரர் சேட்டன் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி மிகவும் வலுவாக தொடங்கியது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இருப்பினும், அடிலெய்டில் நடைபெற்ற பிங்க் பந்து போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் மோசமான தோல்வியைத் தழுவியது. இரு அணிகளுக்கும் இடையிலான பிரிஸ்பேனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது.

இதையும் படிக்க: 5 நிமிடத்துக்கு முன்புதான் தெரியும்; அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து மனம் திறந்த ஜடேஜா!

3 சதங்கள் அடிப்பார்

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறி வரும் நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி இன்னும் இரண்டு சதங்கள் அடிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேட்டன் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி இந்திய அணிக்காக நிறைய சாதனைகளை படைத்துள்ளார். அவரது சாதனைகள் அவர் மீதான நமது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அவர் நன்றாக விளையாடுவார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் இரண்டு சதங்கள் அடிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி 3 சதங்கள் அடிப்பார் என கணித்திருந்தேன் என்றார்.

இதையும் படிக்க: இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக டிராவிஸ் ஹெட்: ரவி சாஸ்திரி

இந்த ஆண்டு அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து விராட் கோலி 614 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் அடங்கும். இந்த ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 376 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி மெல்போர்னில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

5 நிமிடத்துக்கு முன்புதான் தெரியும்; அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து மனம் திறந்த ஜடேஜா!

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து ரவீந்திர ஜடேஜா பேசியுள்ளார்.இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் அ... மேலும் பார்க்க

இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக டிராவிஸ் ஹெட்: ரவி சாஸ்திரி

இந்திய அணிக்கு டிராவிஸ் ஹெட் பெரும் தலைவலியாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் மிகவ... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெ... மேலும் பார்க்க

பாக்ஸிங் டே டெஸ்ட்: தீவிர வலைப்பயிற்சியில் இந்திய பந்துவீச்சாளர்கள் (விடியோ)!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தீவிரமாக வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அண... மேலும் பார்க்க

கோலி, ஸ்மித், ரூட் வீழ்ச்சிக்கான காரணங்கள் என்ன? முன்னாள் வீரரின் கருத்து!

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரிக் சேப்பல் கோலி, ஸ்மித், ரூட் ஓய்வினை யாரும் தீர்மானிக்காதீர்கள் எனக் கூறியுள்ளார். கிரிக்கெட்டில் ஃபேப் போர் (தலைசிறந்த நால்வர்) என கோலி, ஸ்மித், ரூட், வில்லியம்சன் ஆகிய... மேலும் பார்க்க

இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக திட்டங்கள் உள்ளன: இளம் ஆஸி. வீரர்

இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தன்னிடம் சில திட்டங்கள் இருப்பதாக இளம் ஆஸ்திரேலிய வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் ட... மேலும் பார்க்க