Vikatan Digital Awards 2025: "சிம்பு, வெற்றிமாறனின் எந்தப் படத்தைப் பார்த்தாலும்...
விராட் கோலி ஓய்வு பெற்றிருக்கக் கூடாது: தலிபான் தலைவர்
இந்திய வீரர் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கக் கூடாதென தலிபான் தலைவர் பேசியது கவனம் ஈர்த்து வருகிறது.
விராட் கோலி 50 வயதுவரை விளையாட வேண்டுமென்றும் அவர் பேசியது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி (36 வயது) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்தாண்டு மே.12ஆம் தேதி அறிவித்தார்.
விராட் கோலி 123 டெஸ்ட் போட்டிகளில் 9,230 ரன்கள் குவித்துள்ளார்.
சச்சின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது கடைசி ஐந்து வருட போட்டிகள் இந்த முடிவுக்குக் கொண்டு வந்தது.
விராட் கோலிக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
விராட் கோலி 50 வயது வரை விளையாடலாம்
இந்நிலையில், தலிபான் தலைவர் அனஸ் ஹக்கானி பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் விராட் கோலி குறித்து பேசியதாவது:
டெஸ்ட்டில் ரோஹித் ஓய்வு பெற்றது நியாயமானது. ஆனால், விராட் கோலியின் ஓய்வு ஏன் எனத் தெரியவில்லை. உலகத்திலேயே சிலருக்குத்தான் அந்த மாதிரி தனித்தன்மை இருக்கும்.
விராட் கோலி 50 வயது வரை விளையாடலாம் என நினைக்கிறேன்.
இந்திய ஊடகங்களால் விராட் கோலி எரிசல் ஆகியிருக்கலாம். அவருக்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஜோ ரூட் சச்சின் சாதனையை முறியடிப்பதைப் பார்க்கிறோம் என்றார்.