செய்திகள் :

விருதுகள் தேடி வரும்: எதிர்நீச்சல் மதுமிதாவை வாழ்த்திய சின்ன திரை நடிகை!

post image

விருதுகள் தேடி வரும் என நடிகை மதுமிதாவுக்கு வைஷ்ணவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சின்ன திரையில் மக்களைக் கவர்ந்த சிறந்த ஜோடியாக அய்யனார் துணை தொடரில் இருந்து நடிகை மதுமிதாவும், நடிகர் அரவிந்தும் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

அவர்களுக்கு சின்ன திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.15 மணிக்கு அய்யனார் துணை தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நாயகியாக எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நடித்த மதுமிதாவும், நாயகனாக நடிகர் அரவிந்தும் நடித்து வருகின்றனர்.

அதோடுமட்டுமின்றி, அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாக்கியலட்சுமி தொடரில் ராமமூர்த்தி பாத்திரத்தில் நடித்த ரோசரி, இத்தொடரில் இவர்களுக்குத் தந்தையாக நடிக்கிறார்.

நான்கு சகோதர்கள் உள்ள தாய் இல்லாத வீட்டில் மூத்த மருமகளாக வரும் நாயகி (மதுமிதா), கூட்டு குடும்பத்தில் எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதையாக உள்ளது. இதனை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு வருகிறது.

உணர்வுப்பூர்வமாக மக்களுக்கு நெருக்கமான காட்சிகளைக் கொண்டு ஒளிபரப்பாவதால், குறுகிய காலத்திலேயே அதிக மக்களிடம் அய்யனார் துணை தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இத்தொடரில் நடித்துவரும் மதுமிதா - அரவிந்த் ஜோடிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. எதார்த்தமாக நிஜ வாழ்க்கை கணவன் - மனைவியைப் போன்று நடிப்பதால், இவர்கள் நடிப்புக்கு சின்ன திரைக்கான சிறந்த ஜோடி விருது வழங்கப்பட்டுள்ளது.

மதுமிதாவும் வைஷ்ணவியும்

இதனைக் குறிப்பிட்டு நடிகை மதுமிதாவுக்கு அவரின் தோழியும் சக நடிகையுமான வைஷ்ணவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்து பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ''விருதுகள் அவள் செல்லும் வழிதேடி வருகின்றன. நீ எங்கு சென்றாலும் அன்புடன் வழிநடத்தி பலரையும் வென்றுவிடுகிறாய். மகுடத்தை அவள் தேர்வு செய்யவில்லை. மகுடம்தான் அவளைத் தேர்வு செய்துள்ளது. நான் வெற்றி பெறுகிறேனோ இல்லையோ, உன்னுடைய வெற்றியை அருகில் இருந்து போற்றுவேன். என் உடன் பிறவா சகோதரியே, உன்னால் பெருமையடைகிறேன். உங்களுக்கும் எனக்கு கிடைத்ததைப் போன்று தோழி கிடைத்துள்ளாரா? அவரை பாதுகாத்து போற்றுங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க |நாய்கள் முக்கியமா? குழந்தைகள் முக்கியமா? ஜி.பி. முத்துவுக்கு நடிகை பதிலடி!

Ayyanar thunai Serial Actress Madhumitha won award wishes from vaishnavi

கவினின் கிஸ் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள கிஸ் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் கவின் ஸ்டார் படத்திற்குப் பின் பிளடி பெக்கர் படத்தில் நடித்தார். கலவையான விமர்சனங... மேலும் பார்க்க

ஏஜிஎஸ் தயாரிப்பில் அர்ஜுனை இயக்கும் அறிமுக இயக்குநர்!

நடிகர் அர்ஜுனின் புதிய படம் குறித்து ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்துக்கான பூஜை தொடங்கப்பட்டதாக ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஆ... மேலும் பார்க்க

காலை / இரவு உணவைத் தவிர்த்தால் உடல் எடை குறையுமா? - நம்பிக்கையும் உண்மையும்

அதிகமாக சாப்பிடுவதால்தான் உடல் பருமன் ஏற்படுகிறதா? ஒரு வேளை உணவைத் தவிர்த்தால் உடல் எடை குறையுமா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? உடல் பருமன் பற்றிய தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் எஸ்ஆர்எம் மர... மேலும் பார்க்க

ஜீத்து ஜோசப் உடன் ஷேன் நிகம்... மிரட்டும் முதல்பார்வை போஸ்டர்!

மலையாள நடிகர் ஷேன் நிகமின் புதிய பட போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் வழங்குகிறார். திரிடம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தினை இ4 எக்ஸ்பிரிமென்ட் மூவிஸ், பெ... மேலும் பார்க்க

முழுமையாக ஏஐ உதவியால் உருவாகும் ஹிந்தி திரைப்படம்: அனுராக் காஷ்யப் எதிர்ப்பு!

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது இன்ஸ்டா பக்கத்தில் முழுவதுமாக ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட படத்துக்கு கடுமையான கண்டனத்தை முன்வைத்துள்ளார். இந்தப் படத்தை தயாரிக்கும் விஜய் சுப்பிரமணியமை டேக் செய்து அன... மேலும் பார்க்க

நாய்கள் முக்கியமா? குழந்தைகள் முக்கியமா? ஜி.பி. முத்துவுக்கு நடிகை பதிலடி!

நாய்களை விட குழந்தைகளே முக்கியம் எனக் கூறி விடியோ வெளியிட்ட ஜி.பி. முத்துவுக்கு சின்ன திரை நடிகை ஸ்வேதா பதிலளித்துள்ளார். குழந்தைகள் மீது அக்கறை இருந்தால், அவர்களை நாய் கடிக்கும் அளவுக்கு தெருவில் விட... மேலும் பார்க்க