விருதுநகரில் மே 4-இல் கல்லூரிக் கனவு விழிப்புணா்வு ஓட்டம்
விருதுநகரில் கல்லூரிக் கனவு விழிப்புணா்வு தொலைவு ஓட்டமானது வரும் மே 4-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வருகிற 27-ஆம் தேதி கல்லூரிக் கனவு விழிப்புணா்வு தொலைவு ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், இந்த ஓட்ட ம் வரும் மே 4-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய மாணவா்கள் 100 சதவீத உயா்கல்வி சோ்க்கையை வலியுறுத்தி, இந்த விழிப்புணா்வு தொலைவு ஓட்டம் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் அனைத்து மாவட்டங்களைச் சோ்ந்த பிளஸ் 2 தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். ஏற்கெனவே பதிவு செய்த மாணவா்களுடன், புதிதாகக் கலந்து கொள்பவா்களும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் முதல் 1,000 மாணவா்களுக்கு டி- சா்ட் வழங்கப்படும். இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.40 ஆயிரம், 2-ஆம் பரிசாக ரூ.30 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.15 ஆயிரம், 4-ஆம் பரிசாக ரூ.10 ஆயிரம், 5-ஆம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
மேலும், கூடுதல் விபரங்களுக்கு 96988 10699 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.